வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பாகுபலி வசூல் சாதனைகளை மிஞ்சும் தகுதி இந்த ஒரு படத்திற்கு தான் உண்டு.. மார்தட்டிக் கொள்ளும் பிரபலங்கள்

கடந்த சில வருடங்களுக்கு முன் உலக சினிமாவையே தெலுங்கு சினிமா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த படம் தான் பாகுபலி. பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை குவித்தன.

இரண்டு படங்களும் சேர்ந்து உலக அளவில் கிட்டத்தட்ட ஆயிரத்து 800 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இன்றுவரை பாகுபலி படங்களின் வெற்றியை முறியடிக்கும் வல்லமை வேறெந்த படத்திற்கும் இல்லை.

பாகுபலி படங்களின் மூலம் அப்படத்தின் இயக்குனரான ராஜமௌலி இந்திய சினிமாவிலேயே நம்பர் ஒன் இயக்குனராக உருவெடுத்தார். தற்போது அடுத்ததாக ராஜமவுலி ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) எனும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். முன்னதாக இவர்களின் டீஸர்கள் தனித்தனியாக வெளியாகி இருதரப்பு ரசிகர்களையும் கொண்டாட வைத்தது.

RRR படம் வருகிற அக்டோபர் மாதம் 13ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே பாகுபலி படத்தின் வசூல் சாதனைகளை இந்த படம் கண்டிப்பாக முறியடிக்கும் என கூறி வருகின்றனர்.

முன்னதாக RRR படத்தின் வியாபாரங்கள் ரிலீஸுக்கு முன்னரே 900 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. RRR படம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது என்பதும் கூடுதல் தகவல்.

RRR-cinemapettai
RRR-cinemapettai

Trending News