புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி.. சட்டசபையில் தமிழக முதல்வரின் அறிவிப்பு!

ஜனவரி மாதத்தில் பெய்த தொடர் மழையினாலும், புரவி மற்றும் நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலும் குறைக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தற்போது விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார்.

மேலும் விவசாய குடும்பத்திலிருந்து முதல்வரான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் விவசாயிகளின் துயரத்தை நன்றாக அறிந்தவர் என்பது தற்போது புலப்படுகிறது.

ஏனென்றால் இன்று சட்டசபை கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி கூட்டறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார்.

ஏற்கனவே புரவி மற்றும் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணத்தை அறிவித்து, அதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

eps-announcement

தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்ததால், அதிமுக அரசு தான் இரண்டாவது முறையாக விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளது என்ற பெருமையை நிலைநாட்டி உள்ளது.

இதற்காக விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் தங்களது மனம் நிறைந்த பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.

Trending News