உலகின் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி தொடர் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
சினிமாவில் பிரமாண்டம்
சினிமாவைக் கண்டுபிடித்து பொழுதுபோக்குக்கு என்றாலும் அதில் காட்டப்பட்டும் பிரமாண்டமும், கலை மற்றும் தொழில் நுட்பமும்தான் காலம்தாண்டி மக்களையும் எல்லாக் காலத்திலும் பேசவைக்கிறது. அப்படி சினிமா கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. வருடம் தோறும் புதிய தொழில் நுட்பங்கள், கேமராகள் கண்டுபிடிக்கப்பட்டு இத்துறையில் பல புதுமைகள் புகுத்தப்பட்டு செம்மைப் படுத்தப்பட்டு வருகிறது.
அக்காலத்தைப் போல் இன்றைக்குப் படமெடுத்தால் பார்க்கும் பார்வைகளை வேறு போட்டி நிறுவனம் தங்கள் வசம் ஈர்த்துவிடும். அதனால், ஏராளமான நிறுவனங்கள் இருந்தாலும்கூட, தாங்கள் தயாரிக்கும் தொடர், அல்லது மக்களின் மனதிற்கு நெருக்கமாகவும், ஒரு வித்தியாசமான உலகிற்கு அழைத்துச் செல்லும் வகையில், இதுவரை யாரும் உருவாக்காத ஒரு புதிய கலைநயத்தோடு, விஎக்.எக்ஸ், இசை இயக்கம், பிரபல நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட இவர்களை எல்லாம் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றும்போது, செலவு தானாக கையைக் கடிக்கும்.
சினிமாவை விஞ்சிய தொலைக்காட்சி தொடர்
ஆனால், சினிமாவிலும், தொலைக்காட்சித் தொடர் தயாரிப்புத்துறையிலும் முன் அனுபவமும், செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பட்ஜெட் என்பது எப்போதும் ஒரு பொருட்டே அல்ல. அதன்படிதான் தற்போது ஹாலிவுட் சினிமாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்குச் சவால் விடுப்பதுபோல் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களும் பிரமாண்டத்திற்கு குறையில்லாத வகையில் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கவும் சிறந்த படைப்பாக கொடுக்கவும் முயற்சிக்கின்றனர்.
அந்த வகையில் இதுவரை சினிமாவில்தான் அதிக பொருட்செலவில் படங்கள் எடுக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தொலைக்காட்சி தொடருக்காக அதிகபட்ஜெட் செலவிடப்பட்டு, அதுவும் மக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பை பெறுகிறது.
அதன்படி, தியேட்டருக்குச் சென்றுதான் படங்கள் பார்க்கவேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே அல்லது எங்கிருந்தாலும் நெட் இருந்தால் நினைத்த நேரத்தில் நமக்குப் பிடித்த தொடரை எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்பதால் இதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால் இதன் தயாரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
ரூ.8300 கோடி செலவில் தொலைக்காட்சி தொடர்
இந்த நிலையில், அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான லார்ட் ஆஃப் ரிங்ஸ்; தி ரிங்ஸ் ஆப் பவர் என்ற தொடர் ரிலீஸாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்தொடரின் விளம்பரம், தயாரிப்பு, உரிமம் உள்ளிட்ட செலவுகளுக்காக மட்டும் ரூ. 8300 கோடி செலவானதாக தகவல் வெளியாகிறது.
குறிப்பாக, இந்தியாவில் ஒரு பிரமாண்ட படமெடுப்பதற்கு 300 கோடி முதல் 500 கோடி வரையில் செலவிடப்படும் நிலையில், இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவதுபோல் கோடி லார்ட் ஆஃப் ரிங்ஸ்; தி ரிங்ஸ் ஆப் பவர் தொடரின் ஒரு எபிசோடிற்காக மட்டும் ரூ.500 செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
சரியான பட்ஜெட்டுக்கு செய்யும் நியாயம்!
இந்த நிலையில் ஹாலிவுட் படங்களும் சரி, ஓடிடி தளங்களின் வெப் சீரிஸ் தொடரும் சரி, குறிப்பிட அளவு மட்டும் நடிகர்களுக்கு கொடுத்தது போக மீதி படத்தின் பட்ஜெட்டுக்கு என முக்கால்வாசி ஒதுக்கும் தொகை சரியான முறையில் அதற்கென்றே செலவிடப்படுவதால்தான், கொஞ்சம் கூட பிசிறு தட்டாத வகையில், கலை நேர்த்தியான காலத்திற்கும் போற்றும்படியான இப்படி தரமான படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் ரசிகர்கள் மெய்மறந்து பார்க்க கிடைக்கின்றன என ஒரு தொலைக்காட்சி தொடருக்கு 8000 கோடி செலவு செய்தது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.