திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ருத்ர தாண்டவம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? திரெளபதியை விட இரண்டு மடங்காம்!

தமிழ் சினிமாவில் தற்போது படங்களுக்கு செலவு செய்து விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றுதான் கூற வேண்டும். ஜாதி அல்லது மதம் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருந்தாலும் அந்தந்த ஜாதி அல்லது மத தலைவர்களே அந்த படத்திற்கு இலவசமாக விளம்பரம் செய்து விடுகிறார்கள். அதன் மூலம் அந்த படமும் வெற்றி பெற்று விடுகிறது.

அந்த வகையில் படம் வெளியாகும் முன்பே டிரைலர் மூலம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த படம் தான் ருத்ர தாண்டவம். தமிழ் சினிமாவில் திரெளபதி என்ற படம் மூலம் நாடக காதலை அம்பலப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் மோகன் ஜி யின் இரண்டாவது படைப்பாக வெளிவந்துள்ள படம் தான் ருத்ர தாண்டவம்.

இந்த படத்திலும் திரெளபதி பட நாயகன் ரிச்சர்டு ரிஷியே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தவிர கெளதம் மேனன், ராதாரவி, தர்ஷா குப்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பல சர்ச்சைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

போதைப்பழக்கம் மற்றும் மத மாற்றத்திற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்று வந்தாலும், மத ரீதியாக சிலர் இப்படத்தை விமர்சனம் செய்து தான் வருகிறார்கள். இருப்பினும் படம் நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றுள்ளது என்றே கூறலாம்.

rudra-thandavam-collection
rudra-thandavam-collection

அதன்படி ருத்ர தாண்டவம் படம் முதல் நாள் மட்டும் 1.6 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். இந்த வசூல் தமிழகத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திரெளபதி படம் மொத்தமாக 4 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. ஆனால் அந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே 45 லட்சம் ரூபாய் தானாம். திரெளபதியை விட ஒரு நாள் வசூல் அதிகம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News