2020-ல் வெளிவந்த திரௌபதி திரைப்படத்தின் இயக்குனர் மோகன்.ஜி ருத்ரதாண்டவம் படத்தை இயக்கியுள்ளார். திரௌபதி படம் ஒரு சமூகத்தினர் கடுமையாக எதிர்த்தாலும், மற்ற ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் அடைந்தது. நாடகக் காதல், போலி திருமணம் என்ற வார்த்தைகளை தைரியமாக பயன்படுத்த மோகனால் மட்டுமே முடியும்.
திரௌபதி பட கூட்டணி மீண்டும் ருத்ர தாண்டவத்தில் இணைந்துள்ளது. ரிஷி ரிச்சர்டு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சின்னத்திரை நாயகி தர்ஷா குப்தா நடித்துள்ளார். நடிகர் ராதாரவி மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி ராமையா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஜி.எம் பிலிம்ஸ் தயாரிக்கும் ருத்ர தாண்டவத்தின் டிரெய்லர் அண்மையில் வெளிவந்தது. இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது இப்படத்தின் டிரெய்லர்.
ருத்ர தாண்டவத்தின் டிரெய்லரில் தெரிக்கவிட்ட வசனம், நான் என் வேலைய மட்டும் தான்டா பார்த்துட்டு இருந்தேன், என்னைப்போய் ஜாதி வெறியன் ஊரு எல்லாம் பேச வச்சு, எதுக்குடா இந்த கேவலமான அரசியல்.
இயக்குனர் மோகன் ருத்ரதாண்டவம் படத்திற்காக ஊடகங்களில் பேட்டி அளித்து வருகிறார். உங்களது படம் பாஜகவினரை ஆதரிக்கும் படமாக உள்ளதே என பேட்டியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மோகன் என்னுடைய படங்கள் மதம், ஜாதி பிரதிபலிப்பு இல்லை. இதை பாஜகவினர் கொண்டாடினால் எனக்கு மகிழ்ச்சி தான்.
பாஜக ஒரு தேசிய கட்சி, பிரதமருடைய கட்சி மக்கள் என் படத்தை இந்திய அளவில் எடுத்துச் செல்வார்கள் என நம்புகிறேன். நான் மக்களுக்காகத்தான் படம் பண்ணுகிறேன் என்றார். கிறிஸ்தவ சமூகத்தை எதிர்த்து எடுக்கப்பட்ட படமும் இல்லை. இதைத் தவிர பா ரஞ்சித் மற்றும் உங்களுக்கும் இடையே பெரிய போர் நடைபெற்று இருக்கிறது தெரியுமா.? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அப்படி எதுவும் இல்லை ஜாதி மதத்தை தாண்டி மக்களுக்கு, சமூகத்திற்கும் கருத்துக்களை தெரிவிப்பதே எங்களுக்குள் இருக்கும் ஆரோக்கியமான போட்டியாக பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.