ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தளபதி 67 முழு கதையைக் கேட்டவுடன் விலகுகிறாரா த்ரிஷா.? தூக்கி வாரி போட்ட சம்பவம்

நடிகர் விஜய் ‘வாரிசு’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 67வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பானது, ப்ரோமோ வீடியோவுடன் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. ‘லியோ’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த மாதம் தொடங்கப்பட்ட ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று கொண்டிருக்கிறது. ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா என மொத்த படக்குழுவும் அங்கு சென்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகியது. இந்நிலையில் நடிகை த்ரிஷா மட்டும் போன மூன்று நாட்களிலேயே சென்னை திரும்பிவிட்டார்.

Also Read: பிகிலைத் தொடர்ந்து வசூலில் முத்திரை பதித்த வாரிசு.. யாரும் தொட்டுப் பார்க்க முடியாத சாதனையில் விஜய்

வழக்கம் போல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேலையை காட்டிவிட்டார் என்றும்,மற்ற படங்களை போலவே கதாநாயகியை இந்த படத்திலும் வில்லன் கொன்று விடுவார் போல, எனவே தான் மூன்றே நாட்களில் த்ரிஷா காட்சிகளில் நடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார் என்றும் நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்து வந்தனர்.

ஆனால் நடிகை த்ரிஷாவோ வந்த வேகத்தில் தளபதி 67 பட சம்மந்தமாக அவர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட கருத்துக்களை நீக்கிவிட்டார். இதனால் ரசிகர்கள் த்ரிஷா, விஜய் படத்திலிருந்து விலகிவிட்டதாக சொல்லி வருகின்றனர். த்ரிஷாவுக்கு இப்போது தான் மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்து இருக்கின்றன. விட்டதை பிடிக்கும் முழுமூச்சுடன் அவர் இறங்கியிருக்கிறார்.

Also Read: லியோ மட்டுமல்ல கைதி 2 ரிலீஸ் தேதியையும் முடிவு செய்த லோகேஷ்.. மீண்டும் மிரட்ட வரும் டில்லி

லோகேஷ் கனகராஜ் படங்களை பொறுத்தவரை அவருடைய படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்காது. குந்தவை கேரக்டரினால் மீண்டும் முதலிடம் வந்திருக்கும் த்ரிஷா இப்போது டம்மியாக வந்து போனால் மீண்டும் கேரியர் போய்விடும் என்று நினைத்து கூட விலகியிருக்கலாம். த்ரிஷா அடுத்து நடிகர் அஜித் படத்தில் இணையவும் வாய்ப்புகள் இருக்கிறது.

ஒரு வேலை த்ரிஷா பெர்பார்மன்ஸ் திருப்தியாக இல்லாததால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட நீக்கியிருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் நடிகை த்ரிஷா ‘லியோ’ பட பூஜையின் போது தளபதி விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை இன்னும் அவர் ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கவில்லை என்பதால் த்ரிஷா ‘லியோ’ படத்திலிருந்து விலகவில்லை, எல்லாம் வதந்தி என்றும் சொல்லி வருகின்றனர்.

Also Read: லியோ படத்தில் விஷால் இல்லாதது நல்லது தான்.. தயாரிப்பாளர் கூறிய பதிலை கேட்டு ஷாக்கான லோகேஷ்.!

Trending News