வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பிளேபாய் ஆர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. அப்ப இவங்க எனிமி கிடையாதுபா!

தமிழ் சினிமாவில் பிளேபாய் நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இதனை அவரது நண்பர்களான ஆர்யா மற்றும் விக்ராந்த், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

சினிமாவைத் தாண்டி நெருங்கிய நண்பர்களாக விஷாலும், ஆர்யாவும் பழகி வருகின்றனர். பாலா இயக்கத்தில் உருவான அவன் இவன் படத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர்.

இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் எனிமி படத்தில் ஒன்றாக இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்கிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்பதை இத்தனை நாட்களாக சஸ்பென்சாக வைத்து வந்தனர்.

ஆனால் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

mamtha mohandas
mamtha mohandas

 

ப்ளேபாய் என சமூக ஊடகங்கள் ஆர்யாவை சொல்வதைக் கேட்டு அவரது சினிமா நண்பர்கள் ஆர்யாவுக்கு கல்யாணம் ஆயிருச்சுப்பா, இனிமேல் அவர் பிளேபாய் எல்லாம் கிடையாது. அவர் குடும்ப பாங்கான பையன் என அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

இதனை கேட்ட ரசிகர்கள் நாங்களா அவரை பிளேபாய் என்று சொன்னோம் நீங்கள் தானே ஒரு நிகழ்ச்சியில் சொன்னீர்கள் என அவர்களுக்கு பல்பு கொடுத்து வருகின்றனர்.

Trending News