திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

S.A சந்திரசேகர் இயக்கிய 5 மாஸ் படங்கள்.. விஜயகாந்த் முதல் விஜய் வரை கலக்கிட்டாப்ள

இந்திய சினிமாவில் ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, கதாசிரியராக சாதனை படைத்தவர் தளபதியின் தந்தை S A சந்திரசேகர். அவள் ஒரு பச்சைக்குழந்தை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். கிட்டத்தட்ட 70க்கும் மேல் படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இயக்குனராக வேலை பார்த்துள்ளார். அதிலும் முக்கியமாக விஜயகாந்தை மட்டும் வைத்து 19 படங்களும் விஜய்யை வைத்து 9 படங்களும் இயக்கியுள்ளார்.

தற்போது தளபதி இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார் என்றால் சந்திரசேகர் சினிமாவில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்ததும் ஒரு காரணம். ஏனென்றால் இவர் படத்தில் தான் தளபதியை முதலில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். தற்போது இவர் இயக்கி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படங்களின் வரிசைகளை தற்போது பார்க்கலாம்.

சட்டம் ஒரு இருட்டறை : 1981ல் வெளிவந்த படம் சட்டம் ஒரு இருட்டறை, இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை வைத்து ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

வெற்றி:  விஜயகாந்த், விஜய் நடிப்பில் 1984 வெளிவந்த படம் வெற்றி. ஆக்சன் மற்றும் க்ரைம் கலந்த இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது கன்னடம், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. விஜயகாந்த் இந்த படத்தில் பெட்டு வைத்து ஜெயிப்பதற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்வார் என்பது போன்ற கதை அமைக்கப்பட்டிருக்கும். இதனால் கதாநாயகி மூன்று நாட்கள் கெஸ்ட் ஹவுசில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் பெட் இதை வைத்து கதை நகரும் ஆக்ஷன் திரில்லர் கலந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நான் சிகப்பு மனிதன்: சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த், பாக்கியராஜ், அம்பிகா, சத்தியராஜ், நிழல்கள் ரவி, நம்பியார் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1985இல் வெளிவந்த படம் நான் சிகப்பு மனிதன். இந்த படம் மக்கள் மத்தியில் கமர்சியல் ஹிட் அடித்து பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்தது. சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் சிஐடி ஆபீஸராக பாக்யராஜ் நடித்திருப்பார், இந்த கதாபத்திரம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்து. இசைஞானி இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

செந்தூரப்பாண்டி: விஜய், யுவராணி, மனோரமா போன்ற பிரபலங்கள் நடிப்பில், தேவா இசையில் 1993ல் வெளிவந்த படம் செந்தூரபாண்டி. ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கலந்த இந்த படம் விஜய்க்கு வெற்றிப் படமாக அமைந்தது. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது என்றே கூறலாம். இப்படத்தில் விஜய் மற்றும் யுவராணி காதலுக்கு அவரது அண்ணன் பொன்னம்பலம் எதிர்ப்பு தெரிவிக்கிறார். விஜய்க்கு அண்ணனாக விஜயகாந்த் நடித்திருப்பார், அவர் ஒரு கைதியாக ஜெயிலில் இருந்து வெளிவந்து இருப்பார். தங்கள் காதலுக்கு வரும் எதிர்ப்பை மீறி ஒன்று சேருகிறார்கள் என்பதுதான் கதை.

ஒன்ஸ்மோர்: மீண்டும் தனது மகனை வைத்து வெற்றி கொடுத்த படமாகப் பார்க்கப்படுகிறது ஒன்ஸ்மோர். இந்த படத்தில் சிவாஜி கணேசன், விஜய், சிம்ரன் சரோஜாதேவி போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். தேவா இசை அமைத்திருப்பார், இவர் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்பட்டது.

இப்படி பல முன்னணி நடிகர்களை தனது திறமையான இயக்கத்தினால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சந்திரசேகர். தற்போது வரை விஜயின் சினிமா வாழ்க்கைக்கு முதுகெலும்பாக இருப்பதும் அவர் தான் என்பதில் எந்த ஒரு மறுப்பும் இல்லை.

தற்போது கூட இவர் வருடத்திற்கு ஒரு படங்களை இயக்கி தான் வருகிறார். டிராபிக் ராமசாமி, கேப்மாரி போன்ற படங்கள் அடங்கும் இதில் கேப்மாரி படத்தில் படம் சர்ச்சையான விமர்சனங்களுக்கு உள்ளானது. ஏனென்றால் ஜெய்,அதுல்யா நெருக்கமான காட்சிகள் ரசிகர்களை மூஞ்சியை சுழிக்கும் அளவிற்கு அமைக்கப்பட்டிருந்த தான். இன்னும் சினிமாவில் பல படங்களை இயக்கி வெற்றி பெறுவதற்கு சினிமா பேட்டையின் வாழ்த்துக்கள்.

Trending News