கோலிவுட்டில் தற்போது வசூல் நாயகனாக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய், தன்னுடைய சினிமா பயணத்தை 90-களில் துவங்கும் போது அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பெரும் பக்க பலனாக இருந்தார். நாளைய தீர்ப்பு, ரசிகன், விஷ்ணு போன்ற படங்களை எல்லாம் லாபம் கிடைக்குதோ இல்லையோ தன்னுடைய மகனை முன்னணி நடிகராக நிலைநிறுத்த தந்தையாக எஸ்ஏசி படாத பாடுபட்டார்.
ஆனால் தற்போது டாப் ஹீரோவாக வளர்ந்து நிற்கும் விஜய் அரசியலில் நுழைக்க விரும்பினார் எஸ்ஏசி . ஆனால் அந்த விஷயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரின் உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எஸ்ஏசி சமீபத்திய பேட்டி ஒன்றில், 1% கூட விருப்பம் இல்லாமல் விஜய் நடித்து சூப்பர் ஹிட் அடித்த படத்தை பற்றி உடைத்து பேசி மகனுடைய இமேஜை டேமேஜ் செய்துள்ளார்.
Also Read: இரட்டை கதாபாத்திரத்தில் விஜய்யா?. ரசிகர்களை குழப்ப லோகேஷ் வச்ச 5 சீக்ரெட்
விஜய் ஆரம்ப கட்டத்தில் இருந்து ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை அவர் நடிக்கும் படங்களின் கதையை அவரது அப்பா எஸ்ஏசி தான் கேட்பார். அவர் முடிவு செய்யும் இடத்தில் தான் விஜய் நடிப்பார். அப்படி எஸ்ஏசி சொன்ன, நினைத்தேன் வந்தாய் மற்றும் பிரியமானவளே படங்களில் நடிக்க விஜய் மறுத்துவிட்டார்.
படம் பிடிக்கவில்லை என்று கூறினார். ஆனால் எஸ்ஏசி, ‘இதில் நடித்தால் நன்றாக இருக்கும். உனது சம்பளம் அதிகமாக உயரும். பெண்களுக்கு உன் மேல் மதிப்பு வரும்’ என்று கூறி இருக்கிறார். பிடிக்காமலே அந்த படத்தில் விஜய் நடித்து முடித்தார்.
Also Read: ரிலீஸ் தேதியுடன் கதிகலங்க வைத்த லோகேஷ்.. ஹாலிவுட் சினிமாவையே அதிர வைத்த ப்ரோமோ வீடியோ
படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. விஜய் நடித்த அனைத்து வெற்றி படங்களும் அவரது அப்பா சொல்லி நடித்த படங்கள் ஆகும். விஜய், எஸ்ஏசி பிரிந்ததிலிருந்து விஜய் முக்கியமான வெற்றி படங்கள் எதையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் எஸ்ஏசி தற்போது செல்லும் இடமெல்லாம், மகன் என்று கூட பார்க்காமல் விஜய்யின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையைப் பற்றி விவரித்து பேசி, அதில் தனக்கு எவ்வளவு பங்கு இருந்தது என்பதையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
Also Read: விஜய்யுடன் நடித்து அஜித்துடன் நடிக்க முடியாமல் போன 5 நடிகைகள்.. இனிமே ஒன்னும் பண்ண முடியாது ஸ்ரேயா!