திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய் ஆண்டனியை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய தளபதி விஜய்.. எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான சில படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை வைத்திருப்பவர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து அதன் பிறகு நடிகர் அவதாரம் எடுத்து தற்போது தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான படங்களை கொடுத்து வருகிறார்.

எப்படி இவரது இசைக்கு என ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல் தற்போது இவரது நடிப்பில் வரும் படத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதற்கு காரணம் ஒவ்வொரு படத்தின் தலைப்பும் அதன் கதையம்சமும் தான்.

நடிகர் விஜய் ஆண்டனி பொறுத்தவரை மற்ற நடிகர்களை போல் இல்லாமல் படங்களில் எப்போதும் எதார்த்தமான நடிப்பு, நிஜ வாழ்க்கையில் அமைதியான சுபாவம் உள்ளவர் என்பதால் பல ரசிகர்களுக்கும் இவரை பிடிக்கும்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் ஆண்டனி என்னை சினிமாவிற்கு அழைத்து வந்தது எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் தான். அவர் இயக்கத்தில் வெளியான சுக்கிரன் படத்தின் மூலம் நான் இசையமைப்பாளராக அறிமுகமானேன்.

என்னுடைய முதல் படமே விஜயுடன் அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றன. அப்போதிலிருந்து எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கும் எனக்கும் நல்ல நட்பு உருவானதாகவும் பின்பு விஜய்யும் நல்ல நண்பராக உருவானவர் எனவும் தெரிவித்துள்ளார்.

Trending News