சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

லோகேஷ் பெயரை கெடுக்க பெரியவர் செய்யும் சூழ்ச்சி.. வஞ்சத்தை கக்கி பழிதீர்த்த SAC

SAC-Lokesh: அண்மைக்காலமாகவே எஸ் ஏ சந்திரசேகர் பேசும் விஷயங்கள் எல்லாம் ஏதாவது ஒரு சர்ச்சைக்கு வித்திட்டு விடுகிறது. அப்படித்தான் தற்போது அவர் லோகேஷ் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே கூறி இருக்கும் ஒரு விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் மூலம் அவர் தன்னுடைய வஞ்சத்தை தீர்த்துக் கொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதாவது எஸ்.ஏ சந்திரசேகர் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர் சமீபத்தில் நான் ஒரு படத்தை பார்த்தேன்.

அந்த இயக்குனருக்கு போன் செய்து முதல் பாதி மிகவும் அருமையாக இருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி எனக்கு பிடிக்கவில்லை. அது எப்படி அப்பாவே பிள்ளையை பலி கொடுக்க முடியும் என்று கேட்டேன். உடனே இயக்குனர் நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் அப்புறம் பேசுகிறேன் என்று கட் செய்து விட்டார்.

Also read: லிப்லாக், படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டும் பிக் பாஸ் ஜோடி.. எல்லாமே விஜய் அப்பா SAC போட்ட விதை

முதல் பாதி நன்றாக இருக்கிறது என்று சொல்லும்போது கேட்டவர் அதன் பிறகு போனை கட் செய்துவிட்டார் என லோகேஷ் பெயரை குறிப்பிடாமல் கூறியிருந்தார். ஆனால் அனைவருக்குமே அவர் யாரை கூறுகிறார் என்ன வெளிப்படையாக தெரிந்து விட்டது.

தற்போது எஸ் எஸ் சி எதற்காக லோகேஷ் பெயரை கெடுப்பது போல் பேச வேண்டும் என்ற கேள்விகள் தான் எழுந்துள்ளது. ஆனால் இதற்கு பின்னணியில் வேறு ஒரு விஷயமும் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது லியோ படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் நரபலி கொடுப்பது போல் காட்டப்பட்டு இருக்கும்.

எஸ் எஸ் சி அந்த சமூகத்தினர் என்பதால் தான் அவருக்கு கோபம் வந்துவிட்டது. அதை தான் மேடையில் இப்படி குறிப்பிட்டுள்ளார் என திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. அதனாலேயே அவர் லோகேஷ் மீது இருக்கும் வஞ்சத்தை மேடையில் வெளிப்படையாக கக்கி இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Also read: விஜய்யை வைத்து லோகேஷ்க்கு பாடம் எடுத்த SAC.. சண்டை செய்றேன்னு அவமானப்படுத்துவது நியாயமா?

Trending News