ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜயகாந்தை கோபப்பட்டு அடித்த எஸ்ஏ சந்திரசேகர்.. திடீரென போட்டுக் கொடுத்த நடிகை

தற்போது நடிகராக கலக்கி கொண்டிருக்கும் எஸ் ஏ சந்திரசேகர் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதிலும் இவர் கேப்டன் விஜயகாந்தை வைத்து ஏராளமான திரைப்படங்களை இயக்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அந்த வகையில் சட்டம் ஒரு இருட்டறை, குடும்பம், நெஞ்சிலே துணிவிருந்தால் என பல திரைப்படங்கள் இவர்களின் கூட்டணியில் வெளியாகி இருக்கிறது. அதனால் தான் இவர்கள் இருவருக்கும் சினிமாவை தாண்டி ஒரு நல்ல நட்பு இருக்கிறது. ஆனால் கோபக்கார இயக்குனரான இவர் சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் கடுமையாக தான் நடந்து கொள்வாராம்.

Also read:ரஜினி, விஜயகாந்த் கொடுத்த மோசமான ஃபெயிலியர்.. நம்ப வச்சு கழுத்தறுத்த பாரதிராஜா

அதைப்பற்றி நடிகை ராதிகா ஒரு பட விழாவின்போது வெளிப்படையாக கூறியிருக்கிறார். எஸ் ஏ சந்திரசேகர் படம் இயக்கும்போது காட்சிகள் சரியாக வரவில்லை என்றால் நடிகர், நடிகைகளை பயங்கரமாக திட்டி விடுவாராம். அதனாலேயே பலரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பயந்து கொண்டே இருப்பார்களாம்.

சிலருக்கு அடி கூட விழுந்திருக்கிறதாம். அந்த வகையில் இவர் விஜயகாந்தை ஒருமுறை அடித்ததாக ராதிகா வெளிப்படையாக கூறியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன் எஸ் ஏ சந்திரசேகர், பா விஜய் நடிப்பில் நையப்புடை என்ற படம் வெளியானது. அந்த பட விழாவில் கலந்து கொண்ட ராதிகா இந்த விஷயத்தை மேடையில் போட்டு உடைத்தார்.

Also read:ஷோபாவை கண்மூடித்தனமாக அடித்தேன்.. வெளிப்படையாக கூறிய எஸ்ஏ சந்திரசேகர்

அப்போது எஸ்.ஏ சந்திரசேகரும் அருகில் தான் இருந்தார். ராதிகா இப்படி கூறியதை கேட்டு பதறிப் போன எஸ்ஏ சந்திரசேகர் நான் விஜயகாந்தை பலமுறை திட்டியிருக்கிறேன். ஆனால் அடித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை என்று தெளிவுபடுத்தினார். அதன் பிறகு பேசிய ராதிகா ஹீரோயின்கள் கூட இவரிடம் அதிகமாக திட்டு வாங்குவார்கள்.

அதில் திட்டே வாங்காத ஒரே ஹீரோயின் என்றால் அது நான் மட்டும்தான். ஏனென்றால் நான் அவர் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விடுவேன். அதேபோல் அவர் சொல்வது போல் நடித்து விடுவேன். அதனால் நான் இதுவரை திட்டு வாங்கவில்லை என்று கூறிவிட்டு கேப்டன் விஷயத்தையும் நாசுக்காக கூறினார்.

Also read:எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஹிட்டான 5 படங்கள்.. விஜய்யை தூக்கிவிட்ட அந்த படம்

Trending News