தமிழ் சினிமாவில் ஓடாத படங்கள் அனைத்தும் ஹிந்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருவதை பார்த்து பலரும் குழப்பத்தில் சுற்றி வருகின்றனர். இத்தனைக்கும் தமிழில் ஒரு நாள் ஒரு காட்சி கூட தாண்டாத படங்கள் இந்தியில் செம ஹிட் அடித்து வருகிறது.
இயக்குனர் ஹரி கேரியரில் மிக மட்டமான திரைப்படமாக அமைந்ததுதான் சாமி 2. சாமி என்ற பிரம்மாண்ட வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக இருந்தது.
சுமாரான கமர்ஷியல் படம் போல் எடுத்திருந்தால் கூட இந்த படம் ஓடி இருக்குமோ என்னமோ. ஓவர் பில்டப் செய்து படத்தை குப்பையாக எடுத்து வைத்தனர். மேலும் படம் ரிலீசாகி முதல் நாள் முதல் காட்சியை கூட தாண்டவில்லை.
இந்த படத்தை தைரியமாக ஒரு ஹிந்தி நிறுவனம் வாங்கி டப் செய்து தங்களது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் சாமி 2 படம் ஹிந்தியில் 110 மில்லியன் பார்வையாளர்களை அள்ளி குவித்துள்ளதாம்.
இதைப்பார்த்த தமிழ் ரசிகர்கள் இந்த வடக்கன்ஸ் ரசனையை புரிந்து கொள்ளவே முடியவில்லை என கிண்டல் செய்து வருகின்றனர். விக்ரமை கேட்டாலும் ஒப்புக்கொள்வார், சாமி 2 ஒரு மொக்கை படம் என்று.
இதனால் குஷியான பல தயாரிப்பாளர்களும் தற்போது தமிழில் தோல்வி அடைந்த படங்களை இந்தியில் விற்க முயற்சி செய்து வருகிறார்களாம். போற போக்கை பார்த்தால் சென்னையிலேயே ஹிந்தி டப்பிங் படத்தை ரெடி செய்து இப்படியே யூடியூப்பில் வெளியிட்டு விடுவார்கள் எனவும் கூறுகின்றனர்.