தற்போது பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தான். ஆரம்பத்தில் தன்னுடைய மகனுக்காக, படம் தோல்வி அடைந்தாலும் மீண்டும் மீண்டும் அவரை வைத்து படங்களை இயக்கி தற்போது உச்ச நாயகனாக மாற பக்கப் பலமாக இருந்தார்.
யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல! விஜய் அரசியலில் ஈடுபட வேண்டும் என அவருடைய எஸ்ஏ சந்திரசேகர் நினைத்தார். ஆனால் அது விஜய்க்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இதனாலேயே விஜய் தந்தையை ஒதுக்கி வைத்துள்ளார்.
Also Read: ஜீ தமிழின் 2 கதாநாயகிகளை தட்டி தூக்கி விஜய் டிவி.. ராதிகா, எஸ்ஏசி இணைந்த புது சீரியலின் டைட்டில்
ஆனால் எஸ்ஏசி இந்த வயதிலும் தனக்கு பிடித்த வேலையை செய்து கொண்டே தான் இருப்பேன் என்று வெள்ளித்திரையில் இருந்து இப்போது சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடித்துள்ளார்.
கிழக்கு வாசல் சீரியல் புகைப்படம்

இதில் நடிகை ராதிகா, விஜய்யின் நண்பர் சஞ்சீவ், நாகேஷின் மகன் ஆனந்த் பாபு, ரேஷ்மா, அஸ்வினி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த சீரியலை ராதிகாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரடான் மீடியா தயாரிக்கிறது.
இந்த வயசிலும் சீரியலில் நடிக்க வந்த எஸ்ஏசி

Also Read: 1% கூட விருப்பமில்லாமல் நடித்து சூப்பர் ஹிட் அடித்த தளபதி.. மகனோட இமேஜை டேமேஜ் செய்த எஸ்ஏசி
இந்த சீரியலின் முதல் நாள் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. ஆகையால் கிழக்கு வாசல் சீரியல் குழுவினர்களின் குரூப் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. விரைவில் இந்த சீரியலின் ப்ரோமோவும் விஜய் டிவியில் வெளியாக உள்ளது.