புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய் கூட சண்டை முத்தினதுக்கு முக்கிய காரணம் அவங்க தான்.. வெளிப்படையாக கூறிய எஸ்ஏசி

நடிகர் விஜய் அவர்கள் இன்றைய தமிழ் சினிமா உலகின் கமர்சியல் கிங் காக இருக்கிறார். கடந்த சில வருடங்களாக இவருடைய படங்கள் எல்லாமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்து வருகிறது. தற்போது அவருடைய அடுத்த படத்தின் பட்ஜெட் மட்டுமே 300 கோடி என்றும், அதில் விஜய்க்கு சம்பளம் மட்டுமே 150 கோடி என்றும் தகவல்கள் வெளியாகிறது.

தளபதி விஜய் கோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். விஜய்யுடன் ஒரு படம் பண்ணுவதற்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தவமாய் தவம் கிடைக்கின்றனர். மேலும் நடிகர் விஜய்க்கு தற்போது அரசியலில் நாட்டம் அதிகமாக இருப்பதாகவும், அதற்கான வேலைகளை தொடங்கி விட்டார் எனவும், 2024 ஆம் வருடத்தின் பாராளுமன்றத் தேர்தலை விஜய் களத்தில் சந்திப்பார் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Also Read:எஸ்ஏசி-யை வைத்து விஜய்யை நக்கல் செய்த பயில்வான்.. ஜோடியை மாத்துற மாதிரி அதையும் மாத்துறீங்களா!

விஜய் இன்று தமிழக அரசியலில் சாதக சூழ்நிலையை மாற்றும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய ஆளுமையாக மாறி இருக்கிறார். ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் ஒரு வெற்றி படம் கொடுப்பதற்கு இவர் பட்ட கஷ்டங்கள் அதிகம். மேலும் விஜய் சினிமாவில் வருவதை அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அவர்களே விரும்பவில்லை. பின்னர் விஜய்யின் பிடிவாதத்தை உணர்ந்த பிறகு தான் அவர் ஒப்புக்கொண்டார்.

மகனின் விருப்பத்திற்காக ஆல்பங்களை தூக்கிக் கொண்டு சந்திரசேகர் போகாத திரைப்பட இயக்குனர்கள் இல்லை, தயாரிப்பு நிறுவனங்கள் இல்லை. இதை அவரே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். ஆரம்ப காலகட்டங்களில் விஜய்யின் வளர்ச்சிக்கு அவருடைய தந்தை எஸ் ஏ எஸ் சந்திரசேகர் மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். விஜய்க்காக இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் சப்போர்ட் செய்தார்.

Also Read:தளபதி 68 ஹீரோயினை லாக் செய்த விஜய்.. 4 வருடத்திற்கு பின் இணையும் எவர்கிரீன் கதாநாயகி

ஆனால் தற்போது விஜய்க்கும் அவருடைய அப்பாவுக்கும் நல்லுறவு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இதைப்பற்றி சந்திரசேகர் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே விஜய்க்கு அறிவுரைகளை சொல்லி அடுத்தடுத்து அவர் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தது நான்தான். அது அவர் மீது கொண்ட அக்கறையால் நான் செய்தது.

ஆனால் விஜய்க்கு திருமணத்திற்குப் பிறகு இது பிடிக்கவில்லை இதுதான் எங்கள் இருவரது சண்டைக்கும் காரணம் என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் சந்திரசேகர். அவர் திருமணத்திற்கு பின்பு என்று குறிப்பிட்டு கூறுவதால் இவர்களுடைய பிரச்சனைக்கு காரணம் விஜய்யின் மனைவி சங்கீதா என்பது நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் விஜய் அப்பாவை ஒதுக்கும் அளவிற்கு தன் தாயை ஒதுக்காமல் அவரின் ஆசைகளை நிறைவேற்றி வருகிறார்.

Also Read:முதல்முறையாக இணையும் 7 கூட்டணி.. இணையத்தையே அல்லோலபடுத்திய வெங்கட் பிரபு, தளபதி காம்போ

Trending News