எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர். இப்போதும் ஆக்டிவாக வலம் வருபவர். பொதுமேடையிலோ, பேட்டியிலோ தன் மனதில் பட்டத்தை பட்டவர்த்தனமாகப் பேசுபவர். அவர் ரஜினி, விஜயகாந்த், பாக்யராஜ் உள்ளிட்ட பலரை வைத்து படங்கள் இயக்கி சூப்பர் ஹிட்டாக்கியுள்ளார்.
அப்படித்தான், தன் மகன் விஜய்யை நாளைய தீர்ப்பு படம் மூலம் இளம் ஹீரோவாக அறிமுகம் செய்து, அவரது சினிமா ஆசையை நிறைவேற்றினார். இன்று, விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம், இந்தியாவிலும், ஆசியாவிலும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர். அவரை பல லட்சக்கணக்கான ரசிகர்களும், தொண்டர்களும் பின்தொடர்கின்றனர்.
விஜய் பெயரில் எஸ்.ஏ. கட்சி தொடங்குவதாக அறிவிப்பு வெளியானபோது தனக்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன்பின், பெற்றோருடன் விஜய் பேசுவதில்லை. புஸ்ஸி ஆனந்த்துடந்தான் அதிக நேரம் செலவிடுகிறார் என்பது மாதிரி பேச்சுகள் அடிப்பட்டது.
ஏனென்றால் புதுச்சேரி விஜய் மன்ற தலைவராக இருந்த நிலையில் 2006-ல் புதுச்சேரியில் புஸ்ஸி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆக வெற்றி பெற்றவர் ஆனந்த் ( அதனால் புஸ்ஸி ஆனந்த்). அவரது அரசியல் அனுபவம், கட்சியின் மன்றத் தலைவராக இருந்தது இதெல்லாம் விஜய்க்கு பிடித்திருக்கும் போலும்.
எஸ்.ஏ.சி – புஸ்ஸி ஆனந்த் இடையே மோதல்
அப்போது எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவாளர்கள் விஜய்யை முதல்வரே என விழித்து போஸ்டர் ஒட்டினர். இதைப் பார்த்து, கடுப்பான புஸ்ஸி ஆனந்த் அவர்களை மன்றத்திலிருந்து விலக்குவதாக அறிவித்தார். அப்போது முதல் புஸ்ஸி ஆனந்துக்கும் எஸ்.ஏ.சிக்கும் ஆகாது என கூறப்படுகிறது.
அதன்பின், விஜய் கடந்த பிப்ரவரியில் தவெக கட்சியை அறிவித்தார். அக்கட்சியின் கொடி அறிமுக விழாவில் பெற்றோருக்கு முன் வரிசையில் இடம் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. பெற்றோரை விட புஸ்ஸி ஆனந்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என விமர்சிக்கப்பட்டது.
இது சர்ச்சையான நிலையில் இது குறித்து ஒரு யூடியூப்க்கு பேட்டியளித்த எஸ்.ஏ.சி, தன் மகனைச் சுற்றி கிரிமினல்கள் இருப்பது அவருக்கு தெரியவில்லை. விஜய் பெயரில் வாட்ஸ் ஆப் குரூப் உள்ளது. அதில் விஜய்யும் ஒரு குரூப்பில் உள்ளார்.
அந்த குரூப்பில், மன்றத்தின் வெளியே பெஞ்சில் படுத்துக் கொண்டு, ஒருவரை அழைத்து போட்டோ எடுத்து, அதை விஜய் இருக்கும் குரூப்பில் போடச் சொல்லி தன்னை சீரியஸாக வேலை பார்ப்பவர் போல் காண்பித்துக் கொள்கிறார் என விமர்சித்திருந்தார். அதேபோல், சமூக வலைதளத்தில் பலரை லைக்குகள் போடச் சொல்லியும், கமெண்ட் போடச் சொல்லி வருவதாகவும் கூறினார்.
இந்த நிலையில், விஜய் இப்போது கட்சி ஆரம்பித்து அதைச் செயல்படுத்தி வரும் நிலையில், இதைத் தான் அவர தந்தை எஸ்.ஏ.சி முதலிலேயே செய்தாரே? அப்போது ஏன் விஜய் கோபப்பட்டு, கட்சி தொடங்கவில்லை எனக் கூறினார்? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
அன்றே கணித்த எஸ்.ஏ.சி, ஆனால் தளபதி கேட்கலியே?
ஒருவேளை புஸ்ஸி ஆனந்தின் குறுக்கீடு இதில் இருக்கிறதோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்போது கட்சியில் தனக்கு அதிக முக்கியத்துவம், அதிகாரவட்டத்தை தனக்கு ஏற்றப்படி அமைத்தல், நிர்வாகிகளை தனக்கு பழக்கப்பட்டர்களாக அவர் நியமித்து வருவதாக சலசலப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், தன் மகனை ஹீரோவாக்கி, இளையதளதிபாக உயர்த்தி, தளபதியாக்கி உச்சம்தொட வைத்த எஸ்.ஏ.சி அப்பவே விஜய்க்கு அறிவுரை சொன்னார். அதெல்லாம் அவர் கேட்கவில்லை. ஆனால் அவரு மத்தவங்க பேச்ச கேட்டு இப்படி அதிரடி அரசியலில் இறங்கியிருக்காரோ. இனி உட்கட்சிக்குள்ள என்ன பூசல்கள் நடக்கப் போகுதோ என கேள்வி எழுப்பி வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.