கோலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்குபவர் தான் தளபதி விஜய். இவருக்கு தமிழகமெங்கும் பெரும் புகழ் உண்டு. சமீபத்தில் தளபதியின் தந்தை எஸ்ஏசி விஜய்யின் பெயரை பயன்படுத்தி, அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்து பரபரப்பைக் கிளப்பினார்.
மேலும் இதனை அறிந்த தளபதி விஜய், அந்த அரசியல் கட்சிக்கும், தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதுமட்டுமில்லாமல், தன்னுடைய ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என தளபதி வேண்டுகோள் வைத்தார்.
அதாவது சமீபத்தில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் புதியதாக கட்சி ஒன்றை தளபதியின் தந்தை எஸ்ஏசி தொடங்கினார். இதற்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்தக் கட்சியின் பேச்சு அதோடு நின்று போனது. இந்த நிலையில் நடிகர் விஜயின் தந்தை, தற்போது ‘அப்பா எஸ்ஏசி மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் புதியதாக கட்சி ஒன்றை தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் அக்கட்சிக்கு மாவட்ட மற்றும் மாநில தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. அந்த வகையில், அந்தக் கட்சியின் தலைவராக எஸ்ஏ சந்திரசேகரும், மாநில பொதுச்செயலாளராக ஜெயசீலன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனராம். இந்த கட்சியை வருகின்ற பொங்கலன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
எனவே, இந்த செய்தியை கேட்ட தளபதி வெறியர்கள் பலரும் எஸ்ஏசி மீது செம்ம கடுப்பில் இருக்கின்றனராம். இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.