வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து அதிரடி காட்டிய சாச்சனா.. யப்பா! ஆடி போன போட்டியாளர்கள்

Bigg Boss 8: எதிர்பாராததை எதிர்பாரங்கள் என கமலஹாசன் ஏழு சீசன்களாக சொல்லிக் கொண்டிருந்தார். அதை எட்டாவது சீசன் தொடங்கிய ஒரே வாரத்திற்குள் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது ஏற்கனவே மக்களுக்கு அதிருப்தி இருப்பதையும், திடீரென தொகுப்பாளர் மாறியதையும் தெரிந்து கொண்ட சேனல் இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

போட்டியாளர்கள் உள்ளே நுழைந்து 24 மணி நேரத்திலேயே முதல் எவிக்ஷன். அதுவும் போட்டியாளர்களிலேயே ரொம்பவும் இளம் வயதில் இருக்கும் சாச்சனாவை வெளியே அனுப்பினார்கள். அதுவும் வந்த வாய்ப்பு எப்படிப்பட்டது என சாச்சனாவுக்கு மதிப்பு தெரியவில்லை என்று சொல்லி தான் இந்த எலிமினேஷன் நடைபெற்றது.

அது மட்டும் இல்லாமல் இந்த எலிமினேஷனில் விஜய் சேதுபதிக்கு பங்கு இருப்பதாக சொல்லி அவருக்கு எதிராக முதல் நாளிலேயே ஒரு கூட்டம் கிளம்பியது. என்னதான் 24 மணி நேரத்தில் சாச்சனா வீட்டை விட்டு வெளியேறி இருந்தாலும் இந்த வாரம் முழுக்க அவரைப் பற்றிய பேச்சு தான்.

அதிரடி காட்டிய சாச்சனா

சாச்சனா மீண்டும் வீட்டிற்குள் வந்துவிடுவார் என அரசல் புறசலாக நேற்றிலிருந்து செய்திகள் உலாவிக் கொண்டிருந்தது. ஒரு சிலரின் கணிப்பு படியே இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார் சாச்சனா. வந்ததோடு நான் வெளியில் இருந்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன், இங்கே ரஞ்சித், சத்யா மற்றும் விஷால் ரொம்பவும் குறைவான கண்டன்டு கொடுக்கிறீர்கள் என சொல்கிறார்.

சாச்சனாவை மீண்டும் வீட்டுக்குள் பார்த்ததும் போட்டியாளர்கள் கதி கலங்கி போய் இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவர் ஆட்டத்தை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்திருக்கிறார் என்பதால் கொஞ்சம் பதறித்தான் போயிருக்கிறார்கள்.

சாச்சனா இவ்வளவு நாள் வீட்டிற்குள் இருந்திருந்தால் கூட ஏதோ ஒரு காரணத்தால் இருக்கும் இடம் தெரியாமல் போய் இருப்பார். ஆனால் முதல் நாளிலேயே அவரை வீட்டை விட்டு அனுப்பி, இந்த வாரம் முழுக்க அவரைப் பற்றி பேச வைத்து விட்டார்கள்.

சாச்சனாவுக்கு நடந்தது அநியாயம் என பொங்கிய கூட்டம் எல்லாம் இப்போது மொத்தமாக அவருக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்து விடும். அது மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களின் கவனமும் இனி அவர் பக்கம் தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உண்மையாகவே சாச்சனா வெளியேறியதற்கு விஜய் சேதுபதி தான் காரணம் என்றால், தன்னுடைய ரீல் மகளுக்கு செய்ய வேண்டியதை சரியாக செய்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

Trending News