வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அடப்பாவமே.. விட்டு கொடுத்த சச்சனா.. எலிமினேட் ஆனதுக்கு இது தான் காரணமா?

ஆண்கள் Vs பெண்கள் என்பது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடிப்படை நாதம் என்பதை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த உடனேயே போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் ஆக உள்ளது. இது முதல் நாளே ஒரு தலைவலியை கொடுத்தது.

தொடர்ந்து, யாருக்கு எந்தப்பக்கம் வேண்டும் என்பதை போட்டியாளர்களையே கலந்து யோசித்து முடிவெடுக்கச் சொல்ல, முட்டி மோதிய போட்டியாளர்கள் முடிவெடுக்க முடியாமல் தவித்தனர். இது வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்த பிக் பாஸ் “என்ன வெளியில் படுத்து தூங்குகிறீர்களா ?” என்று மிரட்ட ஆண்கள் ஒரு கண்டிஷன் போட்டு, பெண்களுக்காக விட்டு கொடுத்தனர்.

விட்டு கொடுத்த சச்சனா

நாங்க கூறும் ஒரு வாரத்தில் ஆண்கள் யாரையும் நீங்கள் நாமினேட் செய்யக்கூடாது என்று டீல் பேசினர். இதற்க்கு ஒரு சில பெண்கள் ஓகே என்று சொல்ல, தர்ஷிகாவும், ஜாக்குலினும் சொகுசுக்காக இவ்வளவு பெரிய விஷயத்தையா விட்டுக்கொடுப்பீர்கள் என்று கூறி, தங்களுக்கான மைலேஜை ஏற்ற விவாதம் நடத்தினர்.

இந்த நிலையில், தற்போது யாராலும் ஆண்களை நாமினேட் செய்யமுடியாதல்லவா.. இதற்கிடையே நேற்றைய தினம் 24 மணி நேரத்தில் ஒருவர் வெளியேறுவார் என்று சேது செக் வைத்து விட்டு சென்ற நிலையில், வீட்டின் குட்டிப்பிள்ளையாக உள்ளே நுழைந்த சாச்சனா தற்போது எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.

தற்போது, இது தொடர்பாக வெளியான வீடியோவில், “பெண்களுக்கு ஆதரவாக முடிவை எடுத்ததில் என்னுடைய பங்கும் இருக்கிறது. அதனால் அந்த முடிவுக்கு நானும் பொறுப்புதான். இந்த சமயத்தில் ஆண்கள் யாரையும் நாம் நாமினேட்டும் செய்ய முடியாது. முடிவை எடுத்த பொறுப்பில் என்னுடைய பங்கும் இருப்பதால், நீங்கள் என்னை வேண்டுமென்றால் நாமினேட் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னேன். இதைக்கேட்ட அனைவரும் ஏன் இப்படி பேசுகிறாய்.. உள்ளே வருவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று அட்வைஸ் செய்கிறார்கள்.”

தற்போது, இந்த விடியோவை பார்த்து ரசிகர்கள், அட பாவமே.. இப்படியா அப்பாவி பிள்ளையாக இருப்பது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News