தென்னிந்திய சினிமா உலகில் கதாநாயகியாக ஆரம்பித்து அம்மா கேரக்டர் வரை நடித்து தன்னுடைய அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் அந்த நடிகை. தன் 13வது வயதில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் 53 வது வயதில் மரணமடைந்தார்.
தென்னிந்திய சினிமாவில் இவர் இணைந்து நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சிவாஜி, ரஜினி, கமல், ஜெய்சங்கர் போன்ற அனைத்து நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்துள்ளார். இது தவிர அஜித். விஜய் போன்ற நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்துள்ளார்.
இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு நடிகையாக புகழின் உச்சியில் இருந்தவருக்கு அவருடைய மரணம் என்பது சொல்ல முடியாத ஒரு சோகமாக இருந்தது.
நடிகை ஸ்ரீவித்யாவின் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்ததால் அந்த திருமண வாழ்வு விவாகரத்து வரை சென்றது. அதன் பிறகு அவர் எந்த சொந்த பந்தமும் இல்லாமல் தனிமையிலேயே தன் காலத்தை கழித்துள்ளார். தான் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணம் அனைத்தையும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து அதன் மூலம் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளார்.
நன்றாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் கொடிய நோயான புற்றுநோய் விளையாடியது. இவர் கடந்த 2003ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்றாலும் 2006ஆம் ஆண்டு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக மாறியது.
அப்போது அவர் தனக்கு மருந்து வாங்க கூட காசு இல்லாத நிலையில் இருந்ததாக ஒரு தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. இதை அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஒரு பெண் தன் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் அவருக்கு வலி நிவாரண மருந்து கூட வாங்க வழி இல்லாமல் தவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவித்யாவின் சகோதரி உஷா, தான் அந்த டாக்டரின் புத்தகத்தை படித்ததாகவும் ஸ்ரீவித்யாவின் இந்த நிலைக்கு கேரள முன்னாள் அமைச்சரும், நடிகருமான கே பி கணேஷ் குமார் தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதாவது நடிகை ஸ்ரீவித்யா சென்னையிலிருந்து கேரளாவில் சென்று குடியேறிய பின்னர் மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். அப்போது அவருக்கு கே பி கணேஷ்குமாரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அந்த நட்பின் அடிப்படையில் ஸ்ரீவித்யா தொடங்க இருந்த இசைப் பள்ளி சம்பந்தப்பட்ட அறக்கட்டளையை கணேஷ் குமார் தலைமையில் உருவாக்கியிருந்தார்.
அதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறாக மாறியது. ஸ்ரீவித்யாவுக்கு புற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது மருந்து வாங்குவதற்காக அறக்கட்டளையில் இருந்து பணத்தை தருமாறு அவர் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கிருஷ்ணகுமார் மறுத்ததாக தகவல்கள் வெளியாகியது. தற்போது டாக்டர் கிருஷ்ண நாயரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை பார்க்கும் பொழுது அது உண்மைதான் என்பது உறுதியாகிறது.
ஒரு சிறந்த நடிகை தன்னுடைய சொத்துக்களை இழந்து ஏமாற்றப்பட்டு கடைசி காலத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போய் தன் உயிரை விட்டது ஒட்டு மொத்த சினிமா உலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. சினிமாவில் கொடி கட்டிப் பறந்த ஸ்ரீவித்யா தன் மரணத்தின் மூலம் அவருடைய ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் தாங்க முடியாத வேதனையை கொடுத்துச் சென்றுள்ளார்.