ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் சதா. 37 வயதான சதா சினிமாவில் சரித்திர நாயகியாக இடம் பிடிப்பார் என்று பார்த்தால் யூடியூபில் வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார்.
சும்மா சொல்லக்கூடாது. சதாவும் வந்த வேகத்தில் தாறுமாறாக வளர்ச்சி அடைந்தார். மளமளவென படவாய்ப்புகள் குவிந்ததால் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுக்காமல் படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
அதன் காரணமாகவே பிற்காலத்தில் அவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காமல் மார்க்கெட்டை இழந்தார். டார்ச்லைட் போன்ற படங்களில் நடிக்கும் போதே சதாவின் மார்க்கெட் எந்த நிலைமையில் இருக்கிறது என்பது தெரிகிறது.
அப்படிப்பட்ட சதா சமீபத்தில் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான சந்திரமுகி படத்தில் முதன் முதலில் நாயகியாக நான்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டேன் என குறிப்பிட்டுள்ளது ரசிகர்களை ஒரு கணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஒருவேளை சந்திரமுகி படத்தில் சதா நடித்திருந்தால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகியாக மாறி இருப்பாரா எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சந்திரமுகி படத்தில் நடிக்காததற்கு சில சூழ்நிலைகள் காரணமாக மாறிவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தனைக்கும் ஒருமுறைக்கு இருமுறை சந்திரமுகி வாய்ப்பு தன்னை தேடி வந்ததாகவும், அந்தப்படம் பின்னர் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதைப் பார்த்து குமுறி குமுறி அழுததாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சதா.