ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அனிருத்துடன் இணைந்த குட்டி அனிருத்.. இனி இவர் ராஜ்ஜியம் தான்

இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அவருக்கு இனி ஏறுமுகம் மட்டும் தான் என்றே கூறலாம், இவர் பிரபல பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் மகனாக உள்ளார்.

இவர் இசையமைத்து பாடிய கட்சி சேர, ஆசை கூட இரண்டு பாடலும் வேற லெவல் ட்ரெண்ட் ஆனது. இந்தியா மட்டுமல்லாமல் BTS கூட ஒரு நிகழ்வில், இந்த பாடலை பாடினார்கள்.

இப்படி உலகளவில் இந்த பாடல் ஆட்டம் போட வைத்தது. இந்த நிலையில், இந்த பாடல் இவருக்கு கொடுத்த ஹிட்டை தொடர்ந்து சினிமாக்களில் முயற்சி செய்ய ஆரம்பித்தார்.

அப்போது லோகேஷ் கனகராஜை சந்தித்த சாய் அப்யங்கர், ஒரு ஆல்பம் சப்மிட் செய்தார். லோகேஷ் கனகராஜுக்கு இவரது இசை மிகவும் பிடித்து போக, benz படத்தில் இவரை கமிட் செய்தார்.

இதை தொடர்ந்து சூர்யா 45 படத்திலிருந்து ரஹ்மான் விலக, சாய் அப்யங்கர் அந்த படத்தில் கமிட் ஆனார். இது இவருக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பாகவே பார்க்க படுகிறது..

அனிருத்துடன் இணைந்த குட்டி அனிருத்..

இதை தொடர்ந்து அடுத்ததாக கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிக்கும் புதிய படத்தில் கமிட் ஆனார்.

தற்போது சினிமாவை பொறுத்த அளவில், இவரை அனைவரும் ஒரு பெஸ்ட் alternative ஆக பார்த்து வருகின்றனர். மேலும் குட்டி அனிருத் என்றே அழைத்து வருகிறார்கள்.

இப்படி இருக்க இவர் அனிருத்துடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார் என்பது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கூலி படத்துக்கு தற்போது அனிருத் இசையமைத்து வருகிறார்.

அவருடன் சேர்ந்து சாய் அப்யங்கரும் additional programmer ஆக வேலை செய்கிறார். இதை தொடர்ந்து பாட்டு நிச்சயம் Vibe check ஆக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

Trending News