இந்திய சினிமா துறையில் இயல்பான நடிப்பாலும் இயற்கை அழகாலும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து இருப்பவர் நம்ம ரவுடி பேபி சாய் பல்லவி செந்தாமரை. தமிழ்நாட்டில் உள்ள கோத்தகிரியில் பிறந்தவர். இவருடைய பள்ளிப்படிப்பு கோயம்புத்தூரில் சிறப்பாக முடிந்தன.
நடனத்தின் மீது அவருக்கு இருந்த அளவற்ற ஆர்வம் 2018ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சியில் பங்குபெற செய்தது. அதைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு இடிவி தெலுங்கு நிகழ்ச்சியான ‘தீ அல்டிமேட் டான்ஸ்’ என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.
இவருடைய நடன திறமையை பற்றி ரசிகர்கள் அனைவரும் வியந்து பாராட்டினார்கள். நடிகையாகவும் சிறந்த நடன கலைஞராக நமக்கு தெரியும் சாய்பல்லவி ஒரு டாக்டர் என்பது பலருக்கு தெரியாத உண்மை. சார்ஜாவில் உள்ள டிபிலீசியில் மருத்துவப் படிப்பை முடித்தவர் சாய். இருப்பினும் நடனம் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தினால் ஆரம்ப காலத்தில் தாம் தூம், கஸ்தூரிமான் போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் தோன்றினார்.

பின் அவர் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது புதிய பட வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. “பிரேமம்” திரைப்படத்திற்காக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சாய் பல்லவியை தேர்ந்தெடுத்தார். பிரேமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று சாய்பல்லவி பல விருதுகளை பெற்று தந்தது.
அதைத்தொடர்ந்து கலி ,பிதா, கரு, மாரி 2, என்ஜிகே போன்ற திரைப்படங்கள் சிறப்பாக நடித்திருந்தார் இயற்கை அழகுடன் எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் சாய்பல்லவி என்பது மிகையாகாது. தற்போது தெலுங்கில் லவ் ஸ்டோரி, Virata Parvam, ஷாம் சிங்கார ராய் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.