இந்த ஒரு காரணத்தால் பாலிவுட் நடிகையான சாய் பல்லவி.. சர்ருனு உயர்ந்த மார்க்கெட்

sai pallavi
sai pallavi

இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு டாப் நடிகையாக மாற காத்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் வெளியான அமரன் படத்தில் இந்து ரெபேக்கா வர்கீசாக நடித்த சாய் பல்லவி, அடுத்தடுத்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்துவாக நடித்திருக்கும் சாய்பல்லவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அளவில் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவதால், அவர் மீது பாலிவுட் கண்கள் பதிய ஆரம்பித்துள்ளது.

சாய்பல்லவி ஏற்கனவே, நிதிஷ் திவாரி இயக்கத்தில் தயாராகும் ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் 1-ம் 1-ம் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும், 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் கலக்கும் சாய் பல்லவி

இந்த தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் வெளியான அமரன் திரைப்படம் இதுவரை 170 கோடி வசூலை கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வார முடிவுக்குள் 200 கோடி வசூலை அமரன் படம் ஈட்டிவிடும் என்கின்றனர்.

இந்த காரணத்தால் தற்போது சாய் பல்லவி பற்றிய முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. சாய்பல்லவி அடுத்ததாக அமீர்கானுடன் இணைந்துள்ளதாக கூறினார். அதன்படி, அமீர்கான் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஒரு படத்தில் நடிகை சாய்பல்லவி நடித்து வருவதாக கூறியுள்ளார்.

இந்தியில் உருவாகியுள்ள இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுமாம். இந்த படம் சீக்கிரமாவே திரைக்கு வரவிருப்பதால், சாய் பல்லவி ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார்.

Advertisement Amazon Prime Banner