வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

டாப் ஹீரோவுக்கு கொக்கி போட்ட சாய் பல்லவி.. மேடையில் போட்ட சரியான பிட்டு

தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் கஸ்தூரி மான், தாம் தூம் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி, அதன் பிறகு மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்.

இருப்பினும் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார். அந்த அளவிற்கு பல படங்கள் நடித்துள்ளார். சாய் பல்லவி தற்போது கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுத்திருக்கும் கார்கி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

காவல் துறையால் கைது செய்யப்பட்ட தன்னுடைய தந்தையை வெளிக் கொண்டுவர போராடும் மகனைப் பற்றிய கதைதான் கார்கி. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலரை நடிகர் சூர்யா மற்றும் ஆர்யா இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்டோர் ரிலீஸ் செய்து, தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த படம் வரும் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தின் புரமோஷனுக்காக சாய் பல்லவி கலந்து கொண்டபோது பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகள் கேட்டுள்ளனர். அப்போது விஜயுடன் நடிக்கும் ஆசை உள்ளதா என சாய் பல்லவி இடம் கேட்டனர்.

அதற்கு சாய் பல்லவி விஜய் அவர்களுடன் நடிக்கும் ஆசை உள்ளது. நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் விஜய் அவர்களுடன் நடிப்பேன் என கூறி, அடுத்த படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் விஜய் வரும்போது கூட, சாய்பல்லவி ‘ஐ அம் பிக் ஃபேன்’ என சொல்லிய வீடியோ கூட சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

அந்த அளவிற்கு விஜயோட தீவிர ரசிகையாக சாய் பல்லவி உள்ளார். தளபதி விஜய் மற்றும் சாய்பல்லவி இருவரும் அவர்கள் நடிக்கும் படங்களில் நடனத்தில் பின்னி பெடல் எடுப்பவர்கள் என்பதால், இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் நிச்சயம் அந்த படம் ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ட்ரீட் ஆகவே இருக்கும்.

Trending News