சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

செல்வராகவன் படத்தில் நடிக்கும்போது Uneasy ஆ இருந்தது, தனுஷ் தான் காரணம்.. சாய் பல்லவி ஓபன் டாக்

நடிகர் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் மற்றும் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், மறைந்த இந்திய ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை அமரன் திரைப்படமாக தீபாவளியன்று திரைக்கு வந்தது.

படத்தில் இந்து ரெபேக்கா வர்கீசாக சாய் பல்லவி நடித்து அசர வைத்திருப்பார். சொல்லப்போனால் இந்த படத்தை தூக்கி நிறுத்தியதே சாய் பல்லவி தான். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறிய விஷயம் வைரலாகி வருகிறது.

ரொம்ப Uneasy ஆ இருந்தது..

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்த படம் NGK. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி என்று சொல்ல முடியவில்லை என்றாலும் கூட, நன்றாக ஓடிய ஒரு படம்.

ஆனால் ஆரம்பத்தில் சாய் பல்லவி இந்த படத்திலிருந்து விலக எண்ணினாராம். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “துவக்க நாட்களில், நான் நடித்து முடித்த பின், நன்றாக இருக்கிறது, இல்லை என்று எதுவுமே செல்வராகவன் கூற மாட்டார்.”

“ஷாட் ஓகே மட்டும் சொல்லிவிட்டு அமைதியாக போயி விடுவார். அவருடைய இந்த நடத்தை எனக்கு ரொம்ப Uneasy ஆ இருந்தது. அப்போதெல்லாம் படத்திலிருந்து விலகிவிடலாமா என்று கூட நினைத்தேன். பல முறை அதற்க்கு முயற்சியும் செய்தேன்..”

“இந்த நிலையில், ஒருநாள், தனுஷை சந்திக்கும்போது, அவர் என்னிடம் NGK படப்பிடிப்பு எப்படி செல்கிறது என்று கேட்டார். அப்போது நான் இதையெல்லாம் சொல்லிவிட்டு, படத்திலிருந்து விலகி விடலாமா என்று யோசிக்கிறேன் என்று கூறினேன். அப்போது அவர், இதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளாதே, செல்வா அண்ணா அப்படி தான் நம்மை டெஸ்ட் செய்வார். நீ எப்போதும் போல சிறப்பாக நடி” என்று கூறினார். அவர் சொன்ன வார்த்தையால் தான் நான் NGK படத்திலே நடித்தேன் என்று சாய் பல்லவி கூறியுள்ளார்.

சமீப காலமாக தனுஷை தவறான காணோட்டத்தில் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில், அதை எதையும் கண்டுகொள்ளாமல் அவர் வேலையை பார்த்து வருகின்றார். எப்போது தான் இந்த பார்வை மாறுமோ!

Trending News