வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தூக்கி எறிய சாய்பல்லவி கூறிய காரணம்.. வாய்ப்பில்ல என்றாலும் வாய்க்கொழுப்பு அதிகம்

தளபதி விஜய் உடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என பல நடிகைகள் காத்து கிடக்கிறார்கள். அப்படிதான் விஜய்யுடன் நடிப்பது தன்னுடைய வாழ்நாள் கனவு என்று ராஷ்மிகா வாரிசு படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

ஆனால் விஜய்யின் ஜோடி என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார். இந்த சூழலில் சாய் பல்லவி விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை மறுத்து விட்டாராம். பொதுவாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் சாய்பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

Also Read : அஜித்-விஜய்யால் அல்லோலப்படும் டாப் இயக்குனர்கள்.. ஈகோவால் அழியும் தமிழ் சினிமா

இந்நிலையில் சாய் பல்லவி உடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என பல நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதாவது நடிப்பு, நடனம் என அனைத்திலும் சாய்பல்லவி பட்டைய கிளப்ப கூடியவர். ஒரு காலகட்டத்தில் சாய்பல்லவி விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இப்போது விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு வேண்டாம் என்று உதாசீனப்படுத்தி விட்டாராம். அதாவது நான் நல்ல கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்புகிறேன். பெரிய நடிகர்களுடன் நடித்தால் ஹீரோயின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது.

Also Read : விஜய்யுடன் நடித்து பாலிவுட்டில் புகழ்பெற்ற 5 ஹீரோயின்கள்.. தளபதிக்கு இப்படி ஒரு ராசியா

அதுமட்டுமின்றி அரைகுறை ஆடையுடன் பாடலில் ஆட சொல்வார்கள் என விஜய் பட வாய்ப்பை மறுத்துவிட்டாராம். அதேபோல் தான் அஜித்தின் வலிமை படத்திலும் முதலில் சாய் பல்லவியை நடிக்க வைக்க படககுழுவினர் முடிவு செய்திருந்தார்கள். அந்தப் பட வாய்ப்புையும் சாய் பல்லவி மறுத்துவிட்டார். இதை அறிந்த ரசிகர்கள் சாய் பல்லவிக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் வாய்க்கொழுப்பு அதிகம் என கிண்டல் அடித்து பேசுகிறார்கள்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்திற்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடக்க உள்ளார். இப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Also Read : அண்ணன் விஜய்யின் பார்முலாவை காப்பி அடிக்கும் லோகேஷ்.. போட்டி போட்டு பணத்தை வாரி இரைக்க திட்டம்

Trending News