திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

பிரசன்னா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சாய் பல்லவி.. இந்த படம் வந்து 16 வருஷமாச்சு!

இன்று தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் சாய் பல்லவி ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். அது பலருக்கும் தெரியாத ஒன்று.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சாய் பல்லவி. ஒரு படம் ஓகோன்னு வாழ்க்கை என்பதற்கு ஏற்றபடி அந்த படம் அவருக்கு அமைந்தது.

அதனைத் தொடர்ந்து சில படங்கள் மலையாளத்தில் நடித்த சாய்பல்லவி தெலுங்கு சினிமாவில் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பெரிய மார்க்கெட் உருவானது. இதனால் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

saipallavi-cinemapettai
saipallavi-cinemapettai

தமிழிலும் சில படங்கள் நடித்தார். ஆனால் தமிழ் ரசிகர்கள் சாய்பல்லவி நடிகையாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இதன்காரணமாக தற்போதைக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதை தள்ளி போட்டுள்ளார்.

இந்நிலையில் சாய்பல்லவி பிரசன்னா மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான கஸ்தூரிமான் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

sai-pallavi-kasthuri-maan-movie-2005
sai-pallavi-kasthuri-maan-movie-2005

அதுமட்டுமில்லாமல் 2008ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தில், கூட வந்து போகும் சப்போர்ட் கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். இவரும் சினிமாவில் சின்னச் சின்ன கஷ்டங்களை சந்தித்து பின்னர்தான் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரிய வந்துள்ளது.

Trending News