திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

6 படங்களை ரிஜெக்ட் செய்த சாய் பல்லவி.. மணிரத்தினத்துக்கே குட் பாய் சொன்ன மலர்

Sai Pallavi rejected 6 films: நதியோடு ஒப்பிடும் பெண்மைக்கான இலக்கணத்தோடு பார்ப்பவர்களே வசீகரிக்கும் அழகு பதுமை சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் வரப்பிரசாதமே. நடிப்பு மற்றும் நடனத்தில் சமரசம் செய்யாமல் கடின உழைப்புடன் ஜொலிப்பவர், தான் மேற்கொண்டிருக்கும் கொள்கைக்கு நேர் மாறாக இருந்தால் “நோ மீன்ஸ் நோ” தானாம்.

இவ்வாறு தன் மனதிற்கு ஒப்பாத கதைகளை ரிஜெக்ட் செய்த சாய் பல்லவியின் 6 படங்களை காணலாம்.

போலோ சங்கர்: நம்ம தல அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக் தெலுங்கில் போலோ சங்கர் ஆனது. இதில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் அதாவது லட்சுமி மேனன் கேரக்டரில் நடிக்க சாய் பல்லவியை அணுகினார்களாம். ரீமேக் என்பதால் வேண்டாம் என்று மறுத்து விட்டார் சாய். இதில் மாட்டிய கீர்த்தி சுரேசை விழா ஒன்றில் ஏன்டா நடித்தோம் என்கிற அளவுக்கு தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கினர் அக்கட தேசத்தவர்கள்.

டியர் காம்ரேட்: அறிமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கத்தில் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா நடித்த வெளிவந்த திரைப்படத்தில் காதலும், பெண் வன்கொடுமைக்கு எதிரான புரட்சிக் கருத்துக்கள் இருந்த போதும் படத்தில் இடம்பெறும் முத்தகாட்சியால் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டாராம் சாய்பல்லவி.

Also read: சாய் பல்லவிக்கு பின் நடனத்தில் ஆட்டி படைக்க போகும் ஹீரோயின்.. இப்பவே சூர்யா துண்டு போடும் பெண் பிரபு தேவி

காற்று வெளியிடை: மலையாளத்தில் ஹிட்டான பிரேமம் படத்திற்கு பின் கவனமாக கதைகளை தேர்வு செய்ய கடமைப்பட்டார் சாய் பல்லவி. இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர், நடிகைகள் பலரும் மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடாதா என கனவுடன் இருக்க காற்று வெளியிடை படத்தில் சாய்பல்லவிக்கு தானாக தேடி வந்த வாய்ப்பை, இந்த கதைக்கு நான் செட்டாக மாட்டேன் என்று மறுத்தாராம்.

லியோ: லோகேஷ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி படம் லியோ. சாய் பல்லவிக்கு விஜய்யுடன் நடிக்க ஆர்வம் இருந்த போதும் கதைப்படி நாயகிக்கு அழுத்தமான கதாபாத்திரம் இல்லாததால் லியோவில் நடிக்க மறுத்ததாக தகவல்.

வலிமை:  சதுரங்க வேட்டை புகழ் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படத்தில் ஹீமா குரேஷி கதாபாத்திரத்திற்கு இயக்குனரின் முதல் சாய்ஸ் சாய்பல்லவிதானாம். கதைப்படி இந்த கதாபாத்திரத்திற்கு  சொல்லிக் கொள்ளும் அளவு ஸ்கோப்பில்லாததால் வேண்டாம் என்று கூறினாராம்.

வாரிசு: கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் காட்சி அமைப்பை தாண்டி நடனத்தில் மட்டுமே ஜொலித்தார் விஜய்யின் ஜோடி ராஷ்மிகா. இதை கதை சொல்லும் போதே கணித்த சாய் பல்லவி வாரிசு வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்தாராம்.

Also read: ஆந்திராவின் மணிரத்தினத்துக்காக காத்துக் கிடக்கும் விஜய், சூர்யா.. போட்ட முதல்-ஐ காப்பாற்றி கொடுக்கும் இயக்குனர்

Trending News