ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது.. Angry Bird-டாக மாறிய சாய் பல்லவி

பொதுவாக தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர் நடிகை சாய் பல்லவி. காலம் எப்படி மாறினாலும் தனக்கு என்று கோட்பாடுகள் வைத்து அதை மீறி நடந்ததே இல்லை.

சினிமாவில் சாதிக்க பெண்கள் Glamour-ரை தான் கையிலெடுக்க வேண்டும் என்று இருக்கும் எழுதப்படாத விதியை உடைத்து, மேக் அப், glamour உடை என்று எதுவும் இல்லாமல் நம் பக்கத்து வீட்டு பெண் போல காட்சியளிக்கும் சாய் பல்லவி, நல்ல கதைகளை தேர்வு செய்து, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பாலிவுட்-க்கே சென்றுவிட்டார்.

தற்போது அவர் ரன்பீர் கபூருடன் இணைந்து ராமாயண படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

சமீபத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் 300 கோடியை தாண்டி வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்தது.

ஆனால் ஒரு சிலர் வேண்டுமென்றே சாய் பல்லவிக்கு எதிராக, அவர் எப்போதோ கூறிய ஒரு கருத்தை முன்வைத்து boycott saipallavi என்ற ஹாஷ்டாகை ட்ரெண்ட் செய்தார்கள்.

சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்

இப்படி இருக்க, சமீபத்தில் மற்ற ஒரு தகவல் சாய் பல்லவி பற்றி பரவி வருகிறது. ராமாயனா படத்தில் சீதையாக நடித்து வரும் சாய் பல்லவி, இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதால் அசைவம் சாப்பிடாமல் இருப்பதாகவும், மேலும் உணவாளங்களில் கூட சென்று சாப்பிடாமல், தனக்கு என்று சமையல்காரர்கள் வைத்து அவர்கள் செய்யும் சைவ உணவை தான் சாப்பிட்டு வருவதாகவும் கூறி வருகின்றனர்.

இதை கேள்விப்பட்ட சாய் பல்லவி உச்சகட்ட கோபத்திற்கு சென்றுள்ளார். இதை தொடர்ந்து, “ஆதாரமற்ற தகவல்களை இப்படி வெளியிடுவது வாடிக்கையாகி விட்டது.

பெரும்பாலான சமயங்களில் நான் அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால் ஒவ்வொரு முறையும் என் படங்கள் வெளியாகும் நேரத்தில் இப்படியான தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

இந்த முறை சும்மா விடுவதாக இல்லை. இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுத்தே தீருவேன்..” என்று கூறியுள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும்போது, ஒருவரால் சாய் பல்லவியை கூட வெறுக்க முடியுமா? என்று ஆச்சரியத்தை தான் கொடுக்கிறது. அதே நேரத்தில் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஒரு நடிகை, அதுவும் பல sterotype-களை பிரேக் செய்து நடித்து வரும் ஒரு நடிகையின் மீது கூட இவ்வளவு வெறுப்பை வெளிப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் வருகிறது.

Trending News