வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

நயனை தொடர்ந்து சீதா கேரக்டரில் நடிக்கும் சாய் பல்லவிக்கு ஏற்பட்ட நெருக்கடி.. கடைசியாய் கொடுத்த வார்னிங்!

Sai Pallavi: சாய்பல்லவி என்றாலே சாந்தமான நடிகை என்ற ஒரு பிம்பம் இருக்கிறது. அது அத்தனையையும் உடைத்துவிட்டு தன் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கிறார்.

இதைத்தான் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்கள் போல. அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி ஹிந்தியில் ராமாயணம் என்னும் படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.

இதில் ரன்பீர் கபூர் ராமராக நடிக்க, யாஷ் ராவணனாக நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவிக்கு சீதாதேவி கேரக்டர்.

இந்த கேரக்டர் நடிக்கும் எல்லா நடிகைகளுக்கும் சிக்கல் தான் வரும் போல. ஏற்கனவே நடிகை நயன்தாரா சீதா கேரக்டரில் கமிட் ஆன போது படாத பாடுபட்டார்.

சாய் பல்லவிக்கு ஏற்பட்ட நெருக்கடி

அந்த சமயத்தில் தான் அவர் பிரபுதேவாவுடன் காதலில் இருந்ததால் இந்த கேரக்டர் அவருக்கு கொடுக்கவே கூடாது என எதிர்ப்புகள் எழுந்தது.

எதிர்ப்புகளைத் தாண்டி சீதா தேவி கேரக்டரில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபித்தார். படம் ரிலீஸ் ஆன பிறகு யாருமே நயன்தாராவை பற்றி தவறான ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அப்படித்தான் சாய்பல்லவி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு வதந்தி கிளம்பி இருக்கிறது. அதாவது சீதா கேரக்டரில் நடிப்பதற்காக சாய்பல்லவி அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறிவிட்டாராம்.

தான் தங்கும் ஹோட்டல்களில் எல்லாம் உணவுகள் சாப்பிடுவது இல்லையாம். கையோடு ஒரு சமையல்காரர் அழைத்துக் கொண்டு போய் அவர் சமைத்துக் கொடுப்பதை தான் சாப்பிடுகிறார் என்ற செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து தான் சாய் பல்லவி இப்போது அறிக்கை விட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், என்னை பற்றி வெளியாகும் பொய்யான தகவல்களுக்கு பலமுறை நான் அமைதியாக இருந்து விட்டேன்.

இதுபோல் வதந்திகள் வெளியாவது தொடர் கதையாக இருக்கிறது. இனியும் நான் பொறுமையாக இருக்க மாட்டேன். நான் பதிலளிக்கும் நேரம் இது.

என் படங்கள் பற்றி முக்கிய அறிவிப்பு வரும் பொழுது, என்னுடைய சினிமா கேரியரில் முக்கியமான கட்டத்தை நான் எட்டும்போது இந்த மாதிரி வதந்திகள் கிளப்பப்படுகின்றன.

இந்த மாதிரி பொய்யான செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக நான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

Trending News