வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கோபிக்கும் ராதிகாவுக்கும் கலகத்தை மூட்ட வந்த சகுனி.. இனியாவின் திமிரை அடக்கிய பாக்கியாவின் வாரிசு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியிடம் இனியா டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ள பெர்மிஷன் கேட்டார். ஆரம்பத்தில் யோசித்த கோபி, பாக்கியா இதற்கு சம்மதம் கொடுக்கவில்லை என்று தெரிந்ததும் உடனே இனியாவிற்கு கோபி கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்ய ஆரம்பித்து விட்டார். அத்துடன் பாக்யாவிற்கும் இனியாவிற்கும் பிரச்சனையை ஏற்படுத்த இனியாவிடம் நீ உங்க அம்மாவுக்கு எல்லாம் பயப்பட தேவையில்லை.

உன் கூட எப்போதும் உனக்கு துணையாக நான் இருப்பேன் என்று சில வன்மத்தை இனியாவின் மனதிற்குள் ஏற்றி விட்டார். அதன்படி இனியாவும் வீட்டிற்கு போனதும் பாக்யா மற்றும் ஈஸ்வரியை எதிர்த்து பேசி நோகடித்து விட்டார். இதனை தொடர்ந்து கோபி வீட்டிற்கு வந்த போது ராதிகா, பாக்யா வேண்டாம் என்று சொன்னதால் பிடிவாதத்திற்கு நீங்க இனியா பக்கம் நிற்கிறீர்கள்.

சோபி சொல்வதைக் கேட்காமல் பிடிவாதமாக இருக்கும் ராதிகா

இது எந்த விதத்திலும் சரியாக இருக்காது. இனியாவும் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு நீங்கள் நோ சொன்னால் பாக்யாவிடம் போய் பெர்மிஷன் வாங்கி விடுகிறார். பாக்கியா நோ சொன்ன விஷயத்துக்கு உங்ககிட்ட வந்து பேசிப் பெர்மிஷன் வாங்கிக் கொள்கிறார். இது நிச்சயமாக இனியா வாழ்க்கையில் ஒரு பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

அதனால் பாக்யா மீது இருக்கும் கோபத்தை வைத்து இனியாவே பலிகாடாக ஆகாதீர்கள் என்று ராதிகா, கோபிக்கு எச்சரிக்கை கொடுக்கிறார். ஆனால் இது எதையும் கோபி காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் இஷ்டப்படி தான் நடந்து கொள்வேன் என்பதற்கு ஏற்ப இருக்கிறார். அடுத்ததாக இனியா, நான் பேசுனது தவறு தான் என்று பாக்யாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

அதற்கு பாக்யா, நீ பாட்டியின் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். பாட்டியை நோகடிக்கிற மாதிரி பேசுவது தப்பு தான் என்று திட்டுகிறார். இனியும் நீ இந்த மாதிரி பேசினால் நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன் என்று கோபமாக திட்டி விடுகிறார். அடுத்ததாக ராதிகாவின் அம்மா மூட்டு வலி என்று பொய் சொல்லி மறுபடியும் ராதிகா வீட்டிற்கு வந்து விடுகிறார்.

ஆனால் ராதிகாவின் அம்மா கமலாவை பார்த்ததும் கோபிக்கு பிடிக்கவில்லை. கோபி தனியாக ராதிகாவை கூப்பிட்டு உங்க அம்மா ஏன் இங்கே வந்திருக்கிறார். அவங்க வந்தாலே உனக்கும் எனக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிடும். குடும்பத்தில் சந்தோஷம் இல்லாமல் போய்விடும் என்று ராதிகாவிடம் சொல்கிறார். ஆனால் ராதிகா அப்படி எதுவும் நடக்காது என் அம்மா என் வீட்டுக்கு வராமல் வேறு எங்க போவாங்க.

அவங்களுக்கு மூட்டு வலி பிரச்சனை சரியாகும் வரை என்னுடன் தான் இருப்பார் என்று தீர்மானமாக சொல்லிவிட்டார். ஆனால் இந்த ராதிகாவின் அம்மா வந்தாலே ஏதாவது பிரச்சினை வருவது உறுதி தான். அந்த வகையில் முதலில் மாட்டிக்கொள்வது ஈஸ்வரி தான். அடுத்ததாக ராதிகா மற்றும் கோபியின் ஒற்றுமையை கெடுக்கும் விதமாக ஏதாவது பேசி கலகத்தை ஏற்படுத்திவிடுவார்.

அடுத்ததாக பாக்கியா வீட்டிற்கு பாட்டியை பார்ப்பதற்காக எழில் வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது ஈஸ்வரி கவலையில் இருந்ததற்கான காரணத்தை தெரிந்து கொண்டு இனியா செய்தது தவறு என்று கண்டிக்கும் விதமாக எழில் இனியாவிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லி செய்த தவறுக்கு ஈஸ்வரிடம் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News