Salaar film joins Box office 500cr club: இந்த ஆண்டு இந்திய சினிமாவுக்கு பொற்காலம் என்றே சொல்லும் அளவுக்கு பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நூறு கோடி, ஐநூறு கோடி, ஆயிரம் கோடி என பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் பட்டையை கிளப்பி வருகிறது.
முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் வசூலை குறிவைத்து வியாபார நோக்குடன் திட்டமிட்ட காலத்தில் வெளியிடப்படுகிறது. படம் வெளிவந்த முதல் வாரமே படத்தின் வசூலை நிர்ணயிப்பதால் அதன் எதிர்பார்ப்புகள் தேவைக்கு அதிகமாகவே உள்ளது. ஷாருக்கானின் டங்கியும் பிரபாஸின் சலாரும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டு வசூலை வாரி குவித்து வருகின்றது.
பாகுபலிக்கு பின் பிரபாஸ் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த வகையில் வசூலில் கை கொடுக்காமல் போகவே கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் கூட்டணியில் பிரபாஸின் சலாரை அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் முதல் நாள் வசூல் மட்டுமே175 கோடி அடித்து கம்பேக் கொடுத்திருந்தார் பிரபாஸ்.
Also Read: இந்திய சினிமாவுக்கே டஃப் கொடுக்க வரும் பாட்ஷா 2.. பாக்ஸ் ஆபிஸ் ராஜாக்களின் வைரல் போஸ்டர்
இந்தியாவில் காமெடியை விட ஆக்ஷன் விரும்பிகள் அதிகமாக இருக்கின்றாரா என்னவோ பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருதிவிராஜ், ஸ்ருதிஹாசன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் சமீபத்தில் வெளியான சலார் 4 நாட்களைக் கடந்த நிலையில் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. சாருக்கானின் டங்கி வெளியான நிலையில் சலாருக்கு எதிர்பார்ப்பு குறைந்து விடுமோ என்பதை தவிடு பொடியாக்கி 500 கோடி கிளப்பில் இணைய உள்ளது சலார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ முதல் வாரத்தில் 400 கோடியை கடந்து சாதனை செய்தது. இதனை முறியடிக்கும் வகையில் லியோவை பின்னுக்கு தள்ளி வெளிவந்த 4 நாட்களில் 450 கோடியை கடந்து 500 கோடியை எட்ட உள்ளது சலார். ராஜமவுலி யின் பாகுபலிக்கு பின் 500 கோடி கிளப்பில் இணையுள்ள பிரபாஸின் அடுத்த படமாக சலார் உள்ளது.
Also Read: 2023 நம்மளை உறைய வைத்த 4 பேர்.. நாயகனுக்கு ரிவீட் அடித்து மார்க் ஆண்டனி பட வில்லன்