வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரிலீஸ் தேதியுடன் வெளியான சலார் பட புது ட்ரெய்லர்.. வரலாற்றை திருப்பி போடும் ரெண்டு நண்பர்கள்

Salaar Release Trailer : கேஜிஎஃப் படத்திற்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கிய சலார் திரைப்படம் பான் இந்தியா படமாக செப்டம்பர் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் பணிகள் முடியாததால் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது என இப்போது பட குழு ட்ரெய்லருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 இந்த ட்ரெய்லர் வீடியோவை பார்க்கும் போதே புல்லரிக்கிறது. அந்த அளவிற்கு ட்ரெய்லர் முழுக்க வெட்டுவதும், ரத்தம் தெளிப்பதும், துப்பாக்கியால் சுடுவதும், குண்டு வெடிப்பது, தோட்டாக்கள் பறக்கும் காட்சி தான் நிரம்பி இருக்கிறது. இதில் பிரபாஸ், பிரித்திவிராஜ் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர்.

பிரித்திவிராஜுக்காக இந்த படத்தில் பிரபாஸ் எந்த லெவலுக்கு வேணாலும் இறங்கி செய்கிறார். படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இதில் ஸ்ருதிஹாசன், ‘சரக்கு இருக்கா’ என தர லோக்கலாக கேட்கிறார். இறுதியில் ‘கான்சாரோடா கதையை மாற்றிய இரண்டு நண்பர்கள்’ என்ற வசனம் தெறிக்க விடுகிறது.

Also Read: சலார் படத்தை அலங்கரிக்கும் 4 தமிழ் நடிகர்கள்.. குக் வித் கோமாளி மூலம் கிடைத்த வாய்ப்பு

முதலில் கேஜிஎஃப் பகுதியில் கதையை மாற்றியது யாஷ் என்றால், கன்சார் பகுதியில் கதையை மாற்றுவது இந்த இரண்டு நண்பர்களான பிரபாஸ் மற்றும் பிரித்திவிராஜ். இதற்கு முந்தைய படத்தில் அம்மா சென்டிமென்ட்டை பயன்படுத்திய பிரசாந்த் நீல், இந்த படத்தில் பிரண்ட்ஷிப்பை வைத்து சாம்ராஜ்யத்தையே மாற்றி இருக்கிறார்.

சற்றுமுன் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் இந்த ட்ரெய்லரின் மூலம், வரும் 22 ஆம் தேதி வெளியாகும் சலார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. பாகுபலி படத்திற்கு பிறகு சலார் படம் பிரபாஸுக்கு மீண்டும் வெற்றி படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலீஸ் தேதியுடன் வெளியான சலார் ட்ரெய்லர்

Also Read: கேஜிஎஃப் காந்தாரா படத்தை தோற்கடிக்க போகும் சலார்.. முழிப்பிதுங்கி பேய் நிற்கும் பிரபாஸ்

Trending News