சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

நண்பனுக்காக தூண்டில் புழுவாகவும் இருப்பேன், திமிங்கலமாகவும் மாறுவேன்.. அனல் பறக்கும் சலார் ட்ரைலர்

Salar Movie Trailer: கேஜிஎப்-ஐ தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம் தான் சலார். மிகுந்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் தற்போது வெளியாக இருக்கும் சலார் படத்தின் ட்ரைலர் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது.

இந்தப் படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம்  வரும் டிசம்பர் 22ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

இதில் பிரபாஸ் மற்றும் பிரித்திவிராஜ் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். அரியணையை பிடிக்கப் போராடும் பிரித்திவி ராஜுக்காக பிரபாஸ் ஒன் மேன் ஆர்மியாக இருந்து  ராணுவத்தையே அலற விடுகிறார். நட்பை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை நகர்கிறது.

Also Read: 1000 கோடி வசூலை எதிர்பார்த்து வெளிவர உள்ள பிரம்மாண்டமான 6 படங்கள.. கங்குவாவை மிஞ்சுமா காந்தாரா!

அனல் பறக்கும் சலார் ட்ரைலர்

ட்ரைலரில் இடம் பெற்றிருக்கும் மிரட்டலான சண்டை காட்சிகள், புல்லரிக்க வைக்கும் வசனங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது கேஜிஎப் படத்தை மிஞ்சும் அளவுக்கு சலாம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதுமட்டுமல்ல பிரிக்க முடியாத நட்பின் ஆழத்தை சொல்லும் பிரபாஸ், இந்த படத்தில் நண்பனுக்காக தூண்டில் புழுவாகவும் இருப்பேன், திமிங்கலமாகவும் மாறுவேன் என ட்ரைலரின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை கர்ஜிக்கும் சத்தம் பார்ப்போரை மிரள வைக்கிறது. சலாம் படத்தின் ட்ரைலர் வெளியான சில நிமிடத்திலேயே பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சலார் ட்ரைலர் இதோ!

Also Read: தலையை சுற்ற வைக்கும் பிரபாஸின் சொத்து மதிப்பு.. 44 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா?

Trending News