ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம்.. மூர்த்தியை மிஞ்சிய தனம்!

சின்னத்திரை ரசிகர்களிடையே முன்னணி சீரியலாக விளங்கும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் ஒரு நாள் சம்பள விபரம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூத்த அண்ணனான மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஸ்டாலின் முத்து, ஒரு நாளைக்கு ரூ. 12,000 சம்பாதிக்கிறார்.

இவர் கலைஞர் தொலைக்காட்சியில் பாரதிராஜா இயக்கத்தில் ஒளிபரப்பான ‘தெக்கத்தி பொண்ணு’ என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார். இவர் பாரதிராஜாவின் நெருங்கிய உறவினரும் கூட. அத்துடன் பாரதிராஜா இயக்கும் ஒரு சில படங்களிலும் ஸ்டார்லின் முத்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜித்ரா, இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ரூ. 17,000 சம்பாதிக்கிறார்.

இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பிறகு ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரத்தில் சுமார் 100 படங்களுக்கும் மேலாக நடித்திருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லியாகவும், சில சமயம் காமெடி பீஸாகவும் காட்டப்படும் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா, ஒரு நாளைக்கு ரூ. 8,000 சம்பளம் வாங்குகிறார். இவர் தொகுப்பாளினியாக தனது சினிமா பயணத்தை துவங்கி, அதன் பிறகு திரைப்படங்களிலும் தற்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அத்துடன் இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் ஒரு நாளைக்கு ரூ. 10,000 சம்பளம் வாங்குகிறாராம். இவருக்கு சமீபத்தில் தளபதி விஜய்யின் அம்மா மூலம் எஸ்ஏ சந்திரசேகர் அழைப்பில் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்த விஜே சித்ரா. இந்த சீரியலில் நடிக்கும்போது ஒரு நாளைக்கு ரூ. 12,000 சம்பாதித்துள்ளார்.

கொஞ்சம்கொஞ்சமாக சினிமாவில் முன்னேறிய விஜே சித்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு தன்னுடைய 28-வது வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்றுவரை இவருடைய இறப்பு ரசிகர்களால் ஈடுசெய்ய முடியவில்லை. மேலும் இந்த சீரியலில் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவணன் விக்ரம், இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ரூ. 6,000 சம்பாதிக்கிறார். இவர் இந்த சீரியலில் அவருடைய அம்மா இறந்ததால் நிஜமாகவே மொட்டையடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரன், இதில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு ரூ. 10,000 சம்பளம் வாங்குகிறார். இவர் தன்னுடைய நடந்த திறமையினால் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும், குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். எனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சுஜித்ரா திரையுலகில் அதிக அனுபவம் இருப்பதினால் மற்ற நடிகர்களை காட்டிலும் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

Trending News