வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அள்ளி கொடுத்த ஆண்டவர்.. அமரன் பிரபலங்களின் சம்பள விவரம்

Kamal : சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருக்கும் அமரன் படம் இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போதும் பல இடங்களில் டிக்கெட் கிடைக்காமல் ஹவுஸ் ஃபுல்லாக சென்று கொண்டிருக்கிறது.

உலக நாயகன் கமல் தாமாக முன்வந்த இந்த படத்தை தயாரிக்க சம்மதித்தார். அதற்கு கைமேல் பலனாக வசூலை வாரி குவித்து வருகிறது. இதுவரை 150 கோடியை தாண்டி வசூல் பெற்று உள்ளது. தொடர்ந்து அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் எப்படியும் 500 கோடி வசூலை இப்படம் எட்டும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் அமரன் படத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பள விவரம் இப்போது வெளியாகி இருக்கிறது. இதில் தாராளமாக எல்லோருக்குமே கமல் அள்ளிக் கொடுத்திருக்கிறார். அதன்படி இப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்திற்காக 6 கோடி சம்பளம் பெற்று இருக்கிறார்.

அமரன் பட பிரபலங்களின் சம்பள விவரம்

இந்த படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்த இவருக்கு 30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் சம்பளம் பல மடங்கு உயர வாய்ப்பு இருக்கிறது.

மேலும் இந்துவாக சாய் பல்லவி தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருந்தார். இதற்கு முன்னதாக 2 கோடியில் சம்பளம் பெற்று வந்த சாய் பல்லவி அமரன் படத்தில் 3 கோடி சம்பளம் பெற்றார். அமரன் வெற்றியைத் தொடர்ந்து இப்போது நிறைய பட வாய்ப்புகள் சாய் பல்லவிக்கு வர தொடங்கி இருக்கிறது.

இதே போல் இந்திய நாட்டுக்காக தனது உயிரை அர்ப்பணித்த பல ராணுவ வீரர்களின் கதைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் கமல் இந்த படத்தை தயாரித்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து இது போன்ற படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

Trending News