ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

புஷ்பா படத்திற்கு நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம்.. ஒரு பாடலுக்கு சமந்தா வாங்கிய சம்பளம்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் புஷ்பா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கில் தயாரான புஷ்பா படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படம் 200 இருந்து 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் புஷ்பா படத்திற்காக நடிகை, நடிகர்கள் பெற்ற சம்பளம் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுன் : புஷ்பா படத்தில் கதாநாயகனாக புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். இப்படத்தில் செம்மரம் கடத்தவராகவும், லாரி டிரைவராகவும் நடித்திருந்த அல்லு அர்ஜுனுக்கு 18 முதல் 20 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

ராஷ்மிகா மந்தனா : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்காக இவர் 8 லிருந்து 10 கோடி வரை சம்பளமாக பெற்றார்.

சமந்தா : சமந்தா புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது, அதே நேரத்தில் சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தது. இந்த ஒரு பாடலுக்காக சமந்தாவுக்கு சம்பளமாக 1.50 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

பகத் பாசில் : மலையாள படத்தின் சூப்பர் ஸ்டார் பகத் பாசில் புஷ்பா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். அவருடைய கால்ஷீட் கிடைக்காததால் பகத் பாசில் நடித்திருந்தார். புஷ்பா படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த பகத் பாசில் 3.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

புஷ்பா படத்தில் தாட்சாயணியாக நடித்த அனுசியா பரத்வாஜ் 2 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார்.பூமிரெட்டி சித்தப்ப நாயுடுவாக நடித்த ராவ் ரமேஷ் இப்படத்திற்காக 30 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார். மங்கலம் ஸ்ரீனுவாக நடித்த சுனில் ஒரு கோடி வரை சம்பளமாக புஷ்பா படத்திற்கு பெற்றுள்ளார். புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் இப்படத்திற்காக 25 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

Trending News