வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஆர் ஆர் ஆர் படத்திற்கு பிரபலங்கள் வாங்கிய சம்பளம்.. மாஸ் காட்டும் ராஜமௌலி

பாகுபலி இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆர் ஆர் ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். பிரமாண்டமாக எடுக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படம் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்காக நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளத்தை பார்க்கலாம்.

ராம்சரண்: ஆர் ஆர் ஆர் படத்தில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜு கதாபாத்திரத்தில் ஒரு சுதந்திரம் ஆர்வலர் மற்றும் ஒரு பழங்குடி தலைவராக வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்துக்காக ராம்சரண் 25 கோடி சம்பளமாக பெற்றார்.

ஜூனியர் என்டிஆர்: ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹைதராபாத் மாநிலத்தின் விடுதலைக்காக ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராகப் போராடிய தெலுங்கானாவைச் சேர்ந்த கோண்ட் பழங்குடித் தலைவராக கோமரம் பீம்மாக நடித்திருக்கிறார். இப்படத்திற்காக 25 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் ஜூனியர் என்டிஆர்.

ஆலியா பட்: ராஜமவுலியின் புதிய ஹீரோயின் ஆலியா பட். இப்படத்தில் ராம ராஜுவின் காதலியாக சீதா கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்துள்ளார். இப்படத்தில் அலியாபட் நடித்ததற்காக 9 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்காக இவர் 90 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார். ஆர் ஆர் ஆர் படத்தில் ஸ்ரேயா, சரோஜினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்காக அவர் 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

ஒலிவியா மோரிஸ் இப்படத்தில் ஜெனிஃபர் ஆக நடித்ததற்காக ஒரு கோடி சம்பளம் பெற்றுள்ளார். லேடி ஸ்காட்டாக நடித்த அலிசன் டூடிக்கு 45 லட்சம் சம்பளமாக தரப்பட்டது. ஆர் ஆர் ஆர் படத்தின் இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலிக்கு படத்தின் லாப பங்கில் 30 சதவீதத்தை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவே டோலிவுட்டின் மிகப்பெரிய இயக்குனர் ராஜமவுலி என்பதை உறுதி செய்கிறது.

Trending News