புஷ்பா 2 முதல் நாளே உலகம் முழுவதும் 290 கோடிக்கு மேல் வசூலித்தது. இரண்டாவது நாளிலும் 200 கோடிக்கு மேல் வசூலித்தது. விரைவில் 1000 கோடி வசூல் குவிக்கும் என தெரிகிறது.
இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் வெற்றி ‘புஷ்பா 3’ படம் உருவாகும் எனவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
புஷ்பா 2 பட நடிகர்கள் சம்பள விவரம்
அல்லு அர்ஜூன் 300 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா 2 கோடி சம்பளம். ஃபகத் பாசில் 8 கோடி சம்பளம், ஸ்ரீலீலா கிசிக் பாடலில் ஆட 2 கோடி சம்பளம், சுகுமார் 50 கோடி முதல் 80 கோடி சம்பளமாக பெற்றிருக்கலாம் என தகவல் வெளியாகிறது. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை
புஷ்பா 2 படம் மூன்றாண்டுகள் எடுக்கப்பட்டது. அதன் ரிசல்ட் தான் படம் சூப்பர் ஹிட்டாகி 1000 கோடி வசூலை நோக்கிச் செல்கிறது. இருப்பினும் புஷ்பா 3 படத்தில் இதைக் காட்டிலும் நடிகர்கள் கூடுதல் சம்பளம் பெற வாய்ப்புள்ளது.
மேலும், புஷ்பா 3 படம் எடுக்க, எத்தனை ஆண்டுகள் எடுக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
புஷ்பா 3 படத்துக்காக அல்லு அர்ஜூன் 400 கோடி கூட சம்பளம் வாங்க வாய்ப்புண்டு. ஏனெனில் இப்படத்தின் வெற்றியும் எதிர்பார்ப்பும் கூடியுள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.