எதிர்நீச்சல் பிரபலங்கள் வாங்கும் சம்பளம்.. மாரிமுத்துவால் வேலராமமூர்த்திக்கு அடித்த ஜாக்பாட்

Ethirneechal : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் இவர்கள் வாங்கும் சம்பளமும் பெருந்தொகையாக இருக்கிறது.

பெண்களின் உரிமைக்காக போராடும் தொடராக தான் எதிர்நீச்சல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் வேல ராமமூர்த்தி, கனிகா, கமலேஷ், மதுமிதா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த தொடரின் கதாநாயகி மதுமிதாவிற்கு ஒரு எபிசோடுக்கு 15 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்படுகிறது. மேலும் கமலேஷ் மற்றும் ஹரிப்ரியா இருவரும் 15000 சம்பளம் வாங்குகிறார்கள்.

ஆதிகுணசேகரனாக மிரட்டிய மாரிமுத்து

நடிகையாக இருந்து சின்னதிரைக்கு வந்த கனிகா ஒரு எபிசோடுக்கு 12 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். கதாநாயகன் சக்தியும் 12000 தான் சம்பளம் பெறுகிறார். பிரியதர்ஷினி மற்றும் சபரி இருவருக்கும் தலா பத்தாயிரம் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

மேலும் மாரிமுத்து இந்த தொடரில் நடித்து வந்த போது அவருக்கு 20 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டது. திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் அவருக்கு பதிலாக எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக வேலராமமூர்த்தி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முரண்டு பிடித்த வேலராமமூர்த்தி அதன் பிறகு ஒற்றுக்கொண்டார். அவருக்கு மட்டும் சம்பளம் ஒரு எபிசோடுக்கு கிட்டத்தட்ட 35 ஆயிரத்திற்கும் அதிகமாக கொடுக்கப்படுகிறதாம்.