திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெயிலர் சூட்டுடன் ஆரம்பிக்கப் போகும் தலைவர்-170.. கேட்ட சம்பளத்தை அப்படியே கொடுத்த லைக்கா

Actor Rajini: இப்போது திரையரங்குகளையே அலறவிட்டு வரும் படம் தான் ரஜினியின் ஜெயிலர். கடந்த சில வருடங்களாகவே விமர்சன ரீதியாக ரஜினி தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படத்தின் மீது பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தார். அதை இயக்குனர் நெல்சன் காப்பாற்றி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் கடந்த வியாழக்கிழமை தியேட்டரில் வெளியான ஜெயிலர் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்கள் பெற்று வருகிறது. ஜெயிலர் வெற்றி சூட்டுடன் அடுத்த படத்தையும் ஆரம்பிக்க வேண்டும் என்ற விறுவிறுப்புடன் இருக்கிறார் ரஜினி.

Also Read : மாவீரன், ஜெயிலர் படத்தால் அடித்த லக்.. டாப் ஹீரோக்களின் பேவரைட்டாக மாறிய நடிகருக்கு கைவசம் குவியும் படங்கள்

ஏற்கனவே தலைவர் 170 படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க லைக்கா தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தில் தலைவர் மாஸ் காட்டப் போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரஜினி இமயமலையில் இருந்து வந்த உடனே இந்த படத்தின் அக்ரிமெண்ட் கையெழுத்திட இருக்கிறது.

ஜெயிலர் படத்தைப் போல தலைவர் 170 படமும் பான் இந்திய படமாக உருவாகிறது. ஆகையால் மல்டி ஸ்டார்கள் இந்த படத்திலும் இணைந்துள்ளார்களாம். அதன்படி இப்போது தமிழ் சினிமாவில் ஆட்டிப்படைத்து வரும் பகத் பாசில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். மாமன்னன் படத்திற்கு பிறகு கோலிவுட்டில் இவருக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

Also Read : வசூலில் மிரள செய்யும் ஜெயிலர் படம்.. பொறுக்க முடியாமல் கமல், மணிரத்னம் என பஞ்சாயத்தை கூட்டும் ப்ளூ சட்டை

இவரைத் தொடர்ந்து நானியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் கடந்த சில வருடங்களாக ரஜினியின் சம்பளம் சரிவை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜெயிலரின் வெற்றியை பொருத்து தான் தலைவர் 170 படத்தில் ரஜினியின் சம்பளம் நிர்ணயிக்கப்பட இருந்தது.

அதன்படி ரஜினி இந்த படத்திற்கு 135 கோடி சம்பளமாக கேட்டாராம். உடனடியாக எந்த மறுப்பும் தெரிவிக்காமல் லைக்கா கேட்ட தொகையை கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளனராம். மேலும் பாலிவுட்டில் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனும் தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read : ஜெயிலர் 4வது நாள் வசூலை பார்த்து இந்த வார ரிலீஸையும் தள்ளி போடும் திரையுலகம்.. உலகளவில் ரஜினி செய்த சாதனை

Trending News