வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

திருப்பாச்சி முதல் லியோ வரை விஜய் வாங்கிய சம்பளம்.. ஒன் மேன் ஆர்மியாக வலம் வரும் தளபதி

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை நோக்கி நடித்து வருகிறார். இப்படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கு திரும்பினாலும் இப்பொழுது அதிக அளவில் பேசப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இப்படம் இருக்கிறது. அத்துடன் இப்படத்திற்காக விஜய்க்கு சம்பளமாக 150 கோடி பெற்று இருக்கிறார்.

இதற்குப் பிறகு இவர் அடுத்து நடிக்க இருக்கும் படங்களில் அதிகமாக 200 கோடி வரை சம்பளத்தை நிர்ணயித்திருக்கிறார். இப்பொழுது நிலவரத்தின் படி விஜய் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் அதை கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் ரெடியாக இருக்கிறார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு இவருடைய மார்க்கெட் ரேட் கூடிவிட்டது. தற்போது இவருடைய நடிப்புக்கும் சம்பளத்துக்கும் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு உயர்ந்து விட்டார்.

Also read: ஒட்டு மொத்த கவனத்தைப் பெற்ற மாணவன்.. விஜய் செய்த செயல்

ஆனால் இந்த அளவிற்கு இவருடைய இமேஜ் அதிகரித்து இருக்கிறது என்றால் அதற்கு படிக்கலாக அமைந்தது திருப்பாச்சி படம். இப்படத்தில் இருந்து தான் இவருடைய ரேஞ்சே வேற மாதிரி மாறிவிட்டது. அதாவது திருப்பாச்சி படம் விஜய்யை ஒரு அதிரடி ஆக்சன் ஹீரோவாக மாற்றியது என்றே சொல்லலாம். அதன் பிறகு திருமலை படம் இவருக்கு வேறொரு பரிமாணத்தில் கொண்டு போய்விட்டது.

விஜய் திருப்பாச்சி படத்துக்காக வாங்கிய சம்பளம் வெறும் 20 கோடி. அதன்பிறகு படிப்படியாக முன்னேறி தற்போது 140 கோடி முதல் 200 கோடி வரை சம்பளம் வாங்கும் அளவிற்கு தன்னை உயர்த்திக் கொண்டார். இதற்கிடையில் இவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகராக தூக்கிவிட்ட படம் அட்லீ இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த பிகில் படம். இப்படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் 50 கோடி.

Also read: பக்கா கூட்டணியுடன் களமிறங்கும் விஜய்.. அதிரடியாய் வெளியான தளபதி 68 அப்டேட்

அதன் பின் மாஸ்டர் படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளத்தைப் பெற்றார். அடுத்ததாக பீஸ்ட், வாரிசு படங்களில் மூலம் 140 கோடிக்கு சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டார். இதனை தொடர்ந்து இவர் லியோ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைக்கும் தளபதி 68 படத்திற்கு 200 கோடி வரை சம்பளத்தை பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவருடைய மார்க்கெட் இப்பொழுது உயர்ந்துள்ளதால் இவர் இதற்கு மேலே கேட்டால் கூட கொடுக்கும் அளவிற்கு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுவரை இந்த அளவுக்கு அதிகமான சம்பளத்தை யாரும் பெற்றதில்லை. ஒன் மின் ஆர்மியாக தற்போது சினிமாவில் வலம் வருகிறார்.

Also read: தேரை இழுத்து தெருவில் விட்ட அட்லீ.. விஜய்யிடம் மன்றாடி காரியத்தை சாதித்த தயாரிப்பு நிறுவனம்

Trending News