வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

வேத நாயகத்தை தட்டிக்கழித்த இயக்குனர்கள்.. பயன்படுத்திக் கொள்ளாத தமிழ் சினிமா

ஜிந்தா, மாசானம், சக்கரை கவுண்டர், வேதநாயகம் என்ற பெயர்களை கேட்டவுடனே நமக்கு ஞாபகம் வருவது சலீம் கவுஸ் தான். தமிழ் சினிமாவில் வலுவான கதாபாத்திரத்திலும், வசனங்களாலும் வில்லனாக நடித்துள்ளார் சலீம் கவுஸ்.

இவர் தமிழ் சினிமாவில் வெற்றிவேல் படத்தின் மூலம் ஜிந்தா கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே அட்டகாசமான நடிப்பாலும், வித்தியாசமான சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தார். அதேபோல் சின்ன கவுண்டர் படத்திலும் சக்கரை கவுண்டர் ஆக நடித்து அசத்தியிருந்தார்.

சலீம் கவுஸ் கமலுடன் வெற்றி விழா, கார்த்திக்குடன் சீமான், சத்யராஜுடன் மகுடம், பிரபுவுடன் தர்மசீலன், பிரசாந்துடன் திருடா திருடா, சரத்குமாருடன் சாணக்கியா, அஜித்துடன் ரெட், விஜய்யுடன் வேட்டைக்காரன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார்.

ரஜினி படங்களில் வில்லனுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் சலீம் கவுஸ் நடித்ததில்லை. இவர் பல இந்தி படங்களில் நடித்திருந்தாலும் சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

சலீம் கவுஸ் மும்பையைச் சேர்ந்தவர் என்று சினிமா வட்டாரங்கல் முத்திரை பதித்தனர். ஆனால் இவர் திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் பிறந்தவர் என்றும் அக்மார்க் தமிழன் என்றும் கூறப்படுகிறது. இவர் திரைப்படங்களில் நடிக்க தனக்காக போய் வாய்ப்பு கேட்பதில்லையாம்.

இந்தக் கதாபாத்திரத்தில் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர்கள் அழைத்தால் மட்டுமே சலீம் கவுஸ் நடிப்பாராம். சலீம் கவுஸ் நிதானமான நடிப்பும், வில்லத்தனமான சிரிப்பும், தீர்க்கமான முகமும், வில்லனுக்கு உண்டான உடல்மொழியும் உடைய இவரை தமிழ் சினிமா சரியாக இன்னும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

- Advertisement -spot_img

Trending News