தமிழ்நாட்டில் விஜய், அஜித்திற்கு எப்படி ஏராளமான ரசிகர்கள் உள்ளார்களோ அதேபோல வடமாநிலத்தில் ஷாருக்கானுக்கு, சல்மான்கானும் தான் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
தொடர்ந்து சல்மான்கான் பல ஹிட் படங்களை கொடுத்து வருவதால் அவரது மார்க்கெட் எங்கேயோ போய் விட்டது என்று கூட கூறலாம் ஒரு படத்திற்கு 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகின.
சல்மான்கானின் படம் வெளிவந்தால் அங்கு திருவிழா போல தான் காட்சி அளிக்கும் அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இவர் ஹிந்தி பிக்பாஸில் தொகுப்பாளராக பணியாற்றுவதற்கு ஒரு நாளுக்கு 13 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். ஒரு சீசன் முடியும் பொழுது அவருக்கு 400 கோடி சம்பளம் தருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இப்படி இருக்கும் நிலையில் இவரது புதிய படத்தை பிரபல நிறுவனம் ஒன்று அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சல்மான்கானின் புதிய படமான ‘Radhe – Your Most Wanted Bhai’ இதனை ஜீ ஸ்டுடியோஸ் சாட்டிலைட், மியூசிக்கல் ரைட்ஸ் மற்றும் ஓவர் ஆல் இந்தியாவில் ஒளிபரப்ப வதற்காக 230 கோடிக்கு விலை கொடுத்து வாங்கியுள்ளது.
கொரோனா காலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கிய படங்களில் இந்த படம் இடம்பிடித்துள்ளது இதனால் படக்குழுவினர் மற்றும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.