வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை தூக்கிவிடும் சல்மான் கான்.. 2024-ஐ குறி வைத்த மெகா கூட்டணி

Actor Ajith: அஜித்துக்கு பல வெற்றி படங்களை கொடுத்து அவரின் ஆஸ்தான இயக்குனராக இருந்த பிரபலம் தற்போது ஹிந்தி பக்கம் சென்றுள்ளார். இடையில் பல சரிவுகளை சந்தித்த இந்த இயக்குனருக்கு தற்போது மெகா கூட்டணியில் இணையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட இயக்குனர் தற்போது சல்மான் கான் உடன் கைகோர்த்துள்ளார். அந்த வகையில் அஜித்திற்கு பில்லா, ஆரம்பம் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் தான் விஷ்ணுவர்தன். ஆனால் கடைசியாக இவர் இயக்கியிருந்த யட்சன் உள்ளிட்ட சில படங்கள் சரியாக போகவில்லை.

Also read: மத்தவனா இருந்தா பக்கவாதம் வந்திருக்கும்.. உயிரைப் பனையம் வைத்து அஜித் செய்யும் காரியம்

அதை அடுத்து இவர் மீண்டும் அஜித்துடன் இணைய இருக்கிறார் என்பது போன்ற பல செய்திகள் வெளியானது. ஆனால் அஜித் துணிவு படத்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட இருந்த விடாமுயற்சியையே இன்னும் தொடங்கவில்லை. அதில் விஷ்ணுவர்த்தனுக்கு எங்கு தேதி கொடுக்கப் போகிறார் என்ற பேச்சும் ஒரு பக்கம் எழுந்தது.

அதன் காரணமாகவே விஷ்ணுவர்தன் தற்போது சல்மான் கானுக்கு ஒரு கதையை கூறி சம்மதம் வாங்கி இருக்கிறார். கரண் ஜோஹர் தயாரிக்கும் இப்படம் அடுத்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. இது குறித்த தகவல்கள் தான் இப்போது சோஷியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

Also read: அஜித்தின் வேதாளத்தை ரீமேக் செய்ய இதுதான் முக்கிய காரணம்.. அடேங்கப்பா! என்ன ஒரு புத்திசாலித்தனம்

மேலும் சல்மான் கான் விஷ்ணுவர்தன் குறித்து பெருமையாகவும் பேசி இருக்கிறார். அதாவது அவர் தன்னிடம் கதை சொன்ன விதமே ரொம்பவும் இம்ப்ரஸ் ஆக இருந்ததாகவும், அருமையான ஒரு இயக்குனர் என்றும் அவர் தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அது மட்டும் இன்றி தயாரிப்பாளர் கரண் ஜோஹரும் விஷ்ணுவர்த்தனை தாறுமாறாக புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இப்படி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே இப்படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சல்மான்கான் மூலம் ஒரு வெற்றியை பெறுவார் எனவும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Also read: ஒரு வழியா விடாமுயற்சிக்கு விடிவு காலம் பிறந்தாச்சு.. ஹீரோயினை ஓகே செய்து அஜித் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆன கட்டளை

Trending News