Actress Shalu Shammu: சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக அறிமுகமான ஷாலு ஷம்மு ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதற்கு முக்கிய காரணம் சோசியல் மீடியாவில் இவர் அளிக்கும் கவர்ச்சி தரிசனம் தான்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் உடையில் போட்டோ சூட் நடத்தி இவர் வெளியிடும் போட்டோக்களுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவியும். அதேபோல் பேட்டிகள், விளம்பரங்கள் என ஏதாவது ஒரு சர்ச்சையில் இவர் சிக்கிக் கொள்வதும் வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் பல லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அவ்வளவாக படங்களில் கூட நடிக்காத இவர் எப்படி விலை உயர்ந்த காரை வாங்கினார் என்றும் அந்த அளவுக்கு இவருக்கு வருமானம் கொட்டுகிறதா என்றும் உங்களுக்கு தோன்றலாம். ஆனால் உண்மையில் இவர் செலிப்ரிட்டிகளின் ஸ்கின் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யும் சுஹா காஸ்மெட்டிக் கிளினிக்கை நடத்தி வருகிறார். இதன் மூலம் அவருக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது.
அது மட்டும் இன்றி சில ரியாலிட்டி ஷோக்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் என அனைத்திலும் கலந்து கொண்டு இவர் கல்லாகட்டி வருகிறார். அதை வைத்து தான் இப்போது தன்னுடைய மிகப்பெரும் கனவாக இருந்த ஜாகுவார் F Pace காரை 45 லட்சம் கொடுத்து வாங்கி இருக்கிறார். ஆனால் இது சில வருடங்களுக்கு முன்பு வந்த மாடல்.
Also read: சிவகார்த்திகேயன் படத்திற்கு மட்டும் விதிவிலக்கா?. விஜய் படத்திற்கு எழுந்த பிரச்சனை
அதை இப்போது செகண்ட் ஹாண்டில் வாங்கி இருக்கும் ஷம்மு இதன் மூலம் தன்னுடைய ஆசை நிறைவேறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உண்மையில் இந்த மாடல் காரின் விலை 90 லட்சத்திற்கும் மேல் இருக்கிறது. அப்படிப்பட்ட காரை வாங்கியுள்ள ஷாலுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பல லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் கார்

தற்போது பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் பிசினஸை நடத்தி வரும் இவர் அடிக்கடி ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போட்டோ வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். ஆனால் இவருடைய சல்சா நடனம் தான் இவரை அதிக பிரபலம் ஆக்கியது. அந்த சர்ச்சையை தொடர்ந்து இவர் சல்சா ஷாலு என்றும் செல்லமாக அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Also read: சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்து ஏமாந்துட்டேன்.. கோமண நடிகர் கூறிய பகிர் உண்மை