புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சமந்தாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்.. இத அவங்க முன்னாடியே செஞ்சிருக்கலாம்

சமந்தா காத்துவாக்குல 2 காதல் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சமந்தா காட்சிகள் அனைத்தும் எடுத்துவிட்டனர். அதனால் தற்போது சமந்தா அடுத்தடுத்த படங்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

தற்போது பல இயக்குனர்களும் சமந்தாவிடம் படத்தின் கதையை கூறியுள்ளனர். ஆனால் சமந்தா ஹீரோக்களுக்கு நடிகையாக நடிப்பதை விட கதைக்கு முக்கியத்துவம் படங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பல இயக்குனர்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதையை சமந்தாவிடம் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் நாக சைதன்யா சமந்தா இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். அதன்பிறகு சமந்தாவிற்கு நிறைய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது சமந்தா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 3 படங்களில் நடிக்க சம்மதித்துள்ளார்.

samantha-naga-chaitanya-cinemapettai
samantha-naga-chaitanya-cinemapettai

இப்படத்தின் படப்பிடிப்புகள் கூடிய விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு கூட கதாநாயகர்களுக்கு ஜோடியாக ஏராளமான படங்களில் நடித்து வந்த சமந்தா விவாகரத்துக்குப் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள பாடங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இதனைக் கேள்விப்பட்ட ஒரு சிலர் இதனை முன்பே செய்திருந்தால் விவாகரத்து கூட வந்து இருக்காது எனக் கூறி வருகின்றனர். அதற்கு காரணம் சமந்தா நடித்த படங்கள் அனைத்துமே சமீப காலமாக அதிக கவர்ச்சியாக தான் இருந்தது. அது நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என அதனால்தான் விவாகரத்து செய்ததாக கூறி வருகின்றனர்.

மேலும் சமந்தா தற்போது தொழில் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா இனிமேல் கை கொடுக்காவிட்டாலும் தொழில்துறையின் மூலம் அவர் பெரிய அளவில் சம்பாதிப்பார் என சினிமா பிரபலங்கள் கூறிவருகின்றனர். அதெல்லாம் இல்லை என தற்போது சமந்தா அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Trending News