வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

விவாகரத்திற்கு பின்னர் என்னம்மா ஒரு ஐட்டம் டான்ஸ்.? ஒரே பாடலில் மிரள விட்ட சமந்தா

நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் தெரியும். தற்போது இருவருமே அவரவர் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலும் சமந்தா முழு நேரமாக நடிப்பில் பிசியாகி விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இந்த ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு மட்டும் சமந்தா சுமார் 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் வாங்கிய சம்பளத்திற்கு குறைவில்லாமல் தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளார். இதற்கு முன்பு கூட சமந்தா இந்த அளவிற்கு கவர்ச்சி காட்டியதில்லை. ஆனால் இந்த பாடலில் ஓவர் லோ நெக் ஜாக்கெட் மற்றும் நீல நிற குட்டை பாவாடையில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார்.

மேலும் ஒரு டாப் நடிகையாக வலம் வரும் சமந்தா முதல் முறையாக ஐட்டம் பாடலுக்கு, வெறித்தனமாக குத்தாட்டம் போட்டுள்ளதால் இந்த பாடலின் வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள். பார்த்தாலே கிக் ஏறும் அளவிற்கு தாராளமாக கவர்ச்சி காட்டி வேற லெவலில் சமந்தா ஆட்டம் போட்டுள்ளார்.

சமந்தாவின் இந்த புதிய அவதாரம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவாகரத்திற்கு பின்னர் சமந்தா சற்று அடக்கி வாசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படி ஒரு மாற்றத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.

இப்படி கவர்ச்சி காட்டியதால் தான் விவாகரத்தானது என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் இவரின் இந்த புதிய அவதாரம் மேலும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. இப்போது வரை ட்ரெண்டிங்கில் நாலாவது இடத்தை பிடித்து உள்ளது இதனால் ஒரே பாடலில் சமந்தா மிரள விட்டுள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

samantha-pushpa
samantha-pushpa

அதுமட்டுமல்ல சமந்தா இதுபோன்று தொடச்சியாக கவர்ச்சியாக நடிப்பதால் தான் நாக சைதன்யா அவரை விவாகரத்து செய்திருப்பார் எனவும் பலர் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். இருப்பினும் சமந்தா இதை பற்றி எல்லாம் கவலைப்படுவதாக தெரியவே இல்லை.

Trending News