திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

என்னது விவாகரத்துல்லாம் கப்சாவா? கடைசி நேரத்தில் உஷாரானா சமந்தா

சினிமாவில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. சினிமா பிரபலங்கள் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மனரீதியாக பிரிந்து சட்டரீதியாகவும் பிரிந்து விடுகின்றனர். இது இவர்களை ஃபாலோ செய்யும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தான் கொடுக்கிறது. அந்த நிலையில் சமீபத்தில் சமந்தா நாக சைதன்யா விவாகரத்து பற்றி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

சமீபத்தில் நாகார்ஜுனாவிடம் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெறுவதற்கு யார் அதிகம் விரும்பினார் என கேட்கப்பட்டது. அதற்கு நாகர்ஜுனா சமந்தா தான் விவாகரத்து வேண்டும் என கேட்டார் அதனால்தான் விவாகரத்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் நாகசைதன்யா கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கூட சமந்தா எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் எப்போது வேண்டுமானாலும் எங்கள் வீட்டில் வரலாம் அவர்களுடன் வாழ்ந்த நாட்கள் இன்றும் நினைவாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் விவாகரத்து பெற்றாலும் அவர் எங்கள் வீட்டில் ஒருவர் தான் எனவும் கூறினார்.

ஆனால் சமந்தா விவாகரத்து பற்றி எதையும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். மேலும் இந்த பிரிவின் சோகத்திலிருந்து மீள்வதற்காக தனது நண்பர்களுடன் வெளியூர் சென்று சந்தோஷமாக விளையாடி வருகிறார். சமீபத்தில் நண்பர்களுடன் பனிச்சறுக்கு விளையாடிய வீடியோவை வெளியிட்டிருந்தார்.

தற்போது சமந்தாஅவரது சமூக வலைதளப் பக்கத்தில் விவாகரத்து பற்றிய பதிவுகளை நீக்கியுள்ளார். மேலும் இவர்கள் இருவரும் கவுன்சிலிங் சென்றுள்ளனர் அங்கு இவர்கள் இருவருக்கும் வாழ்க்கை பற்றிய விஷயங்களையும் சில முக்கியமான அறிவுரைகளையும் கூறியுள்ளனர்.

இதனால் சிறிது மனம் மாறிய சமந்தா சமூக வலைதளத்தில் பதிவிட்ட விவகாரத்தை நீக்கியுள்ளாராம். கூடிய விரைவில் இவர்கள் இணைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியை கேட்டதிலிருந்து இவர்கள் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Trending News